சீனாவின் புஜியான் மாகாணத்திலுள்ள செங்கில் எனும் இடத்தைச் சேர்ந்த வென் ஜெயின் (வயது 41) என்பவரே இவ்வாறு நீண்ட நகங்களை வளர்த்து வருகிறார். இந்நகங்களை வளர்ப்பதற்கு முன்பு இவர் எப்போதும் மற்றவர்களுடன் சண்டை பிடித்துக்கொண்டு இருப்பாராம்.
ஆனால் தற்போது 35 சென்றிமீற்றர் (14 அங்குலம்) நீளத்திற்கு அவரின் இடது கை நகங்கள் வளர்ந்துள்ளதால் அவை கோபத்தின் போது மற்றவர்களை கைகளால் குத்துவதை தடுக்கின்றன என்று வென் ஜியான் கூறியுள்ளார்.
நான் இளம்பருவத்தில் இருக்கும் போது எனக்கு அதிகமாக கோபப்படும் குணம் இருந்தது. நான் எப்போதும் சண்டைப்பிடிப்பவனாக இருந்தேன். அதேவேளை எப்போதும் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வேன்.
அதன்பின் நான் எனது நகங்களை வளர்ப்பதற்கு தீர்மானித்தேன். இந்நகங்கள் எனது கோபத்தை அடக்குவதற்கு உதவி செய்கின்றன. காரணம், மற்றவர்கள் முன் கை ஓங்குவதற்கு முன் எனது நகங்கள் என்னை இரு தடவை சிந்திக்க வைக்கின்றன என்று வென் தெரிவித்தார்.
தற்போது அவர் சண்டைப் பேர்வழியாக அல்லாமல் நீளமான நகங்களை வளர்த்தவராக அறியப்பட்டுள்ளார். சிறுவர்களுக்கான ஆடைக்கடை ஒன்றையும் அவர் திறந்திருக்கிறார். இந்தக் கடையின் பெயர் Long Nail.
ஆனால் அவரது நீண்ட நகங்கள் அவருக்கு பல அசௌகரியங்களையும் ஏற்படுத்துகின்றன. அவர் நித்திரைகொள்ளும் போது அவரது நகங்கள் உடைந்து விடும் என்பதற்காக பாதணிகள் வைக்கும் பெட்டியில் அவரது இடது கையை வைத்துக்கொண்டு உறங்குகின்றாராம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக