அதிபரான இரண்டு ஆண்டு களில் இந்திய குழந்தைகள் படிப்பில் சுட்டி, அமெரிக்க குழந்தைகளையும் அப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு புத்திமதி சொன் னார். இந்தியர்களுக்கு வேலை கொடுக்கும் அமெரிக்க கம்பெனிகளுக்கு சலுகைகளை ரத்து செய்தார். வேலைக்காக செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை சிரமமாக்கினார். விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், பேங்கர்கள், கல்வியாளர்களை சந்திக்கும்போது இந்தியாவை சுட்டிக்காட்ட தவறுவதில்லை.
இந்தியர்களுக்கு பொறுப்பான பதவிகளை கொடுத்து அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்கிறார். அதே நேரத்தில், இந்தி யாவால் அமெரிக்காவின் செல்வாக்குக்கு ஆபத்து வரப்போவதாக ஒரு தோற்றத்தை சராசரி அமெரிக்கர்கள் மனதில் ஏற்படுத்த என்ன அவசியம் என்று புரியவில்லை. இண்டியன் மிடில்கிளாஸ் நிறைய்ய சாப்பிடுவதால் உலகில் உணவு தானிய விலை எகிறிவிட்டது என்று ஜார்ஜ் புஷ் கண்டு பிடித்தபோது இந்தியர்கள் கோபப்படவில்லை. வழக்கம்போல் ரசித்து சிரித்தனர்.
ஒபாமா விஷயத்தில் அப்படி இல்லை. மன்மோகன் சிங்கை, நமது ஜனநாயகத்தை அவர் என்னதான் பாராட்டினாலும் நம்மவர்கள் மகிழவில்லை.
எல்லாவகையிலும் உலகின் நம்பர் ஒன் நாடு அமெரிக்கா என்ற கவுரவத்தை காலப்போக்கில் இந்தியா தகர்த்துவிடும் என்ற கவலை ஒபாமாவை பீடித்திருக்கலாம்.
அப்படி இருந்தால் அது அனாவசியம். வளர்ச்சி வரைபடம் கவர்ச்சியாக இருந்தாலும், இந்தியாவில் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள் இந்த நூற்றாண்டில் வெற்றி காண்பதற்கான அறிகுறிகள் இல்லை.
பந்தயத்தில் முதலாவதாக ஓடிக் கொண்டிருப்பவன், தனக்கு முன்னால் ஒருவன் ஓடுவதாக கருதி அவனை முந்த முயல வேண்டுமே தவிர, பின்னால் வருபவனை பற்றியே சிந்தித்தால் மனம் தளர்ந்து கால்கள் சோர்ந்துவிடும். முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள அது சரியான வழியல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக