26 வயதுடைய ஜிம்மி என்ற இந்தக் குரங்கு, நைட்டிரோய் மிருகக் காட்சிசாலையில் தொடர்ந்து மூன்று வாரங்கள் அழகான ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களை பிரமிக்கச் செய்துள்ளது.
இக்குரங்கின் பயிற்றுவிப்பாளர் ரோச்ட் சேபா இது தொடர்பாக கூறுகையில், ஏனைய மனிதக் குரங்குகள் போல், ஜிம்மி விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடுவதற்கு விருப்பமில்லை.
அதனால் 03 வாரங்களுக்கு முன்பு ஏனயை மிருகக் காட்சிசாலைகளில் உள்ள மிருகங்களின் ஓவியத் திறன் பற்றி வாசித்தப்பின் ஜிம்மிக்கும் ஓவியம் வரைவதற்கு பயிற்றுவித்தேன் என்றார்.
ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் அக்குரங்கு மிகவும் கவனமாக பிளாஸ்திக் கொள்கலன்களிலிருந்து பெயின்றை எடுத்து, அழகான ஓவியங்களை வரைகின்றது எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக