அமண்டா பிரெட்லி என்ற மேற்படி யுவதி தன்னை முன்னாள் காதலர் (28 வயது) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொய்க் குற்றச் சாட்டை சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் 17 மணி நேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அமண்டா பிரெட்லியின் சம்மதத்துடனேயே அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக அவர் வாதிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை 3 மாத காலம் நடைபெற்ற நிலையில், அமண்டா பிரெட்லி தான் பொய் கூறியதாக ஒப்புக் கொண் டார்.
மேற்படி வழக்கை விசாரித்த போல்டன் கிறவுண் நீதிமன்ற நீதிபதி, பொய்யான குற்றச் சாட்டு ஒன்றின் நிமித்தம் பொலிஸாரின் விசாரணை நேரத்தை வீணடித்து நிரபராதி ஒருவருக்கு சிரமம் விளைவித்த குற்றச்சாட்டில் அமண்டாவுக்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக