குருநாகல் கொகரல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பலங்க தல்கொடபிடியவைச் சேர்ந்த 38 வயதுடைய இரு குழந்தையின் தாயான மீனாட்சி லட்சுமி தமக்கென வீடொன்றைக் கட்டிக் கொள்ளும் வகையில் குவைட் நாடு சென்று தம் கை கால்களில் சிறு கம்பி அறையபட்டு சித்திவதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பி தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் 5 குண்டூசிகள் மொத்தம் 14 அகற்றம்
மீனாட்சி லட்சுமியின் உடலில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மேலும் 5 குண்டூசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குருநாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.ராஜமந்திரி தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டில் இருந்து வந்த குறிப்பிட்ட பெண்ணின் உடலில் நேற்று முன்தினம் உடலில் இருந்து 9 குண்டூசிகள் அகற்றப்பட்டிருந்ததாகவும், நேற்றைய தினம் இவரிடம் பொலிஸாரும், வேலைவாய்ப்பு பணியகத்தாரும் வாக்குமூலம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத்தில் வைத்து தனது மாதாந்தச் சம்பளத்தைக் கேட்டபோது தன்னை துன்புறுத்தி சித்திரவதை செய்து ஊசி ஏற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
முகத்தில் துணியை போட்டு விழுத்தி கதறக் கதற கம்பி ஏற்றினர்
மூன்று மாதங்களாகச் சம்பளம் எதும் வழங்காமல் வேலை வாங்கிய வீட்டு உரிமையாளர் ஒருநாள் திடீரெனத் தாக்கி கையில் சிறு கம்பிகளை ஏற்றியதாக மீனாட்சி லட்சுமி தெரிவித்தார்.
மூன்று மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்தக் கவலையில் நான் தனியாக அழுது கொண்டிருந்த போது அங்குவந்த வீட்டு உரி மையாளர் முகத்தில் துணியொன்றைப் போட்டு கீழே வீழ்த்தினார். அதன் பின்னர் அங்கு வந்த அவரின் மனைவி கையில் வைத்திருந்த சிறு கம்பிகளை ஏற்றினார்.
கதறி அழ அழ கம்பி ஏற்பட் டது” எனத் துக்கத்துடன் கூறினார் லட்சுமி. கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி இச் சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர்; அந்த வீட்டிலிருந்து வெளியேறி 3 மாதங்கள் குவைத் வேலை வாய்ப்பு நிலையத்தில் தங்கியிருந்ததாகக் கூறினார்.
அங்கிருந்து வீட்டைத் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை யென்றும் தெரிவித்தார். பின்னர் நவம்பர் 11ம் திகதி இலங்கை திரும்பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் லட்சுமி கூறினார். இவருடைய இடது கையிலிருந்து 8 சிறிய கம்பிகளும் காலிலிருந்து ஒரு கம்பியும் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஊசிபோன்ற மெல்லிய கம்பிகளே அவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக