விட்ஸ் நகரில் விவாகரத்துப் பெற்று தனிமையில் வாழும் அன்டி பார்க் (47 வயது) என்ற மேற்படி நபர், உலகிலேயே எதனையும் விட நத்தார் மரத்தைத் தான் மிகவும் நேசிப்பதாகவும் அதனை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெவிக்கிறார்.
எனினும் தனக்கும் நத்தார் மரத்துக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு எந்தவொரு மதகுருவும் முன்வராததால் திருமணம் தாமதப்படுவதாக அவர் கூறினார்.
“திருமண மோதிரத்தை ஏற்கனவே தயாராக செய்து வைத்துள்ளேன். ஆனால் அம்மோதிரத்தை நத்தார் மரத்தின் எந்தக் கிளையில் போடுவது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை'' என்று அன்டி பார்க் தெரிவித்தார்.
கடந்த 17 வருடங்களாக தினசரி நத்தார் தினத்தை கொண்டாடி வருவதன் மூலம் திருவாளர் கிறிஸ்மஸ் என அவர் செல்லமாக அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தான் திருமணம் செய்வதற்கு விரும்பும் பிளாஸ்டிக் நத்தார் மரம் கடந்த இரு வருடங்களாக மட்டுமே தனது வீட்டிலிருப்பதாக குறிப்பிட்ட அவர், அதனை பார்க்கும் போது தனக்கு மிகவும் நெருக்கமுடைய ஒன்றாக தான் உணர்வதாக கூறினார்.
1993 ஆம் ஆண்டு தற்கொண்டு நத்தார் தினத்தை தினசரி கொண்டாடி வரும் அன்டி பார்க், பொருளாதார நெருக்கடி காரணமாக நத்தார் தின விருந்துபசார நிகழ்ச்சிகளை கடந்த சில வருடங்களாக குறைத்துள்ள போதும் இதுவரை 6000 க்கு மேற்பட்ட நத்தார் மாலை விருந்துநேர உணவை உண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக