சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் மூன்று கோயிலடி வீதியூடாக உரும்பிராய்-மருதனார்மடம் வீதியை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவரை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோர் கடத்தி சென்றுள்ளனர். இதன்போது கடத்தப்பட்ட இளைஞனின் சைக்கிள் மற்றும் பாதணி என்பன சம்பவம் நடந்த வீதியில் விடப்பட்டிருந்தன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் சைக்கிள் மற்றும் பாதணியை மீட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் கடத்தப்பட்ட இளைஞன் தொடர்பில் விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இக்கடத்தல் சம்பவத்தையடுத்து உரும்பிராய் மூன்று கோயிலடிப் பகுதியில் நேற்றுக் காலை பதற்றம் நிலவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உரும்பிராய் மூன்று கோயிலுக்கு அண்மையிலுள்ள வீட்டில் வைத்து வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மா.சிவலிங்கம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக