வவுனியாவைச் சேர்ந்த 25 வயதான சுஜேந்ரா அமரசிங்கம், மிசோரி பல்கலைக்கழகத்தில் பொறியல்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்தவேளை கடையொன்றில் பகுதிநேர ஊழியராக தொழில் புரிந்துவந்தார்.
நேற்றுமுன்தினம் செவ்வாய் அதிகாலை 4.40 மணியளவில் அவர் கொள்ளையன் ஒருவனால் சுடப்பட்டுள்ளார். சுஜேந்திரா அமரசிங்கம் கடைசியிலிருந்து வெளியே வரும் வரை காத்திருந்து கொள்ளையன் அவரை சுட்டுக்கொன்றதாக கான்ஸாஸ் சிட்டி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பத்திரிகை செய்தியின்படி, துப்பாக்கிதாரியைக் கண்ட சுஜேந்திரா மீண்டும் கடைக்குள் ஓட முயன்றார். எனினும் அவர் வாசலில் வைத்து சுடப்பட்டார்.
அவரை கடந்து சென்ற கொள்ளையன் கடையிலுள்ள சில பொருட்களை திருடிச் சென்றான். ஆனால் பணத்தை திருடவில்லை. சில நிமிடங்களின்பின் வாடிக்கையாளர் ஒருவர் கடைக்கு வந்து எரிபொருள் பெற்றுக்கொண்டபின் பணம் செலுத்த முற்பட்டபோது சுஜேந்திரா தரையில் இறந்துகொண்டிருப்பதை கண்டார். எனினும் அவ்வாடிக்கையாளர் கடையில் பணத்தை திருடுவதற்காக சுஜேந்திராவை கடந்து சென்றார். அவர் சுஜேந்திராவுக்கு உதவவோ பொலிஸாருக்கு தகவல் வழங்கவோ முன்வரவில்லை.
20 நிமிடங்களின்பின் அங்கு வந்த மற்றொரு வாடிக்கையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். ஆனால், அப்போது காலம் கடந்திருந்தது. வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்ட சுஜேந்திரா அமரசிங்கம் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சுஜேந்திரா மகிழ்ச்சிகரமான சிறந்த குணவில்புள்ளவர் என தெரிவித்துள்ள அக்கடையின் மற்றொரு ஊழியரான பிரின்ஸ்டன் அவர் மோசமான அயலவர்களைக் கொண்டிருந்துள்ளார் என கூறியுள்ளார்.
கடையின் உரிமையாளரான இம்தியாஸ் மொக்னிஜா கருத்துத் தெரிவிக்கையில் 'அவர் சிறிய தவறு செய்துவிட்டார். அவர் மக்களை நம்பிவிட்டார்' எனக் கூறியுள்ளார்.
கடையின் கண்காணிப்புக் கமெராக்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோவிலிருந்து மேற்படி கொள்ளையனினதும் சந்தர்ப்பவாத வாடிக்கையாளரினதும் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பின்வரும் இலக்கத்தின் மூலம் தகவல் வழங்கலாம் என கான்சாஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக