வன்கெலிஸ் கபடோஸின் இளமைப் பருவத்து படம்
தற்கொலை செய்து கொள்வதற்காக 9 ஆவது மாடியிலிருந்து குதித்த நபர் ஒருவர், கீழே குவிக்கப்பட்டிருந்த குப்பை பைகளின் குவியல் மீது விழுந்து உயிர் தப்பிய சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.ஒரு வாரத்துக்கு முன் மேற்படி நகரைத் தாக்கிய பனிப்புயலின் போது சேகரிக்கப்பட்ட குப்பைகளே அகற்றப்படாமல் இவ்வாறு குவியலாக போடப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
45 ஆவது வீதியிலுள்ள மாடிக் குடியிருப் பிலுள்ள வீட்டிலிருந்தே வன்கெலிஸ் கபடோஸ் (26 வயது) என்ற இந்த இளைஞர் குதித்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது தேறி வருவதாக கூறப்படுகிறது.
வன்கெலிஸ் கபடோஸ் கடுமையாக மன அழுத்தத்துக்கு உள்ளாகி ஒரு மாத காலம் பெல்லேவு மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றதாக அவரது மைத்துனர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக