இவரது மனைவி பலருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்க துவங்கினார். இதனால் வீட்டை சுற்றிலும் மின்வேலியை அமைத்தார். வீட்டிற்கு யார் வந்தாலும், காலிங்பெல்லை தொட்டாலும் ஷாக் அடிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்.
பிளெச்சர் அலுவலகம் சென்ற பின்னர் மின்வேலி இயங்கி கொண்டிருக்கும். இந்த விஷயம் வெகு நாட்களுக்கு வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு ஷாக் அடித்ததை தொடர்ந்து விசயம் கோர்ட்டுக்கு சென்றது. கோர்ட்டில் மனைவி மீது கொண்ட சந்தேகத்தினால் இதனை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார் பிளெச்சர்.
இதனையடுத்து நீதிபதி பிளெச்சரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்க உத்தரவிட்டார். அங்கு அவர் மனநோய் பாதிப்பினால் இந்த செயலை செய்திருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக