நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் சுன்னாகம் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வேளையில் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரின் வாகனத்தைக் கண்டதும் பதட்டமான நிலையில், வந்த பாதை வழியாக திரும்பிச் செல்வதை அவதானித்த பொலிஸார் வாகனத்தை தொடர்ந்து சென்று மறைத்து சோதனையிட்ட போது முச்சக்கர வண்டியில் இளம் பெண் ஒருவரும் மற்றும் மூவரும் இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போது குறித்த பெண் பலாத்காரமான முறையில் விட்டில் இருந்து கடத்தப்பட்ட விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை கைது செய்து, பொலிஸார் நேற்று அவர்களை மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
தொடர்ந்து சந்தேகநபர்களை இரண்டு வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்கும்படியும் குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் படியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக