குஜராத் மாநிலம், அஹமதாபாத் அருகே உள்ள, “சங்காகேம்” கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கென பிரத்தியேகமாக இணையத் தளம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரிலிருந்து 70 கி. மீ. தொலைவில், “சங்காகேம்” என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மக்கள் தொகை 8,000. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், வேலை நிமித்தமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து, அங்கேயே தங்கி விட்டனர். பல ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் தள்ளியிருந்தாலும், தலைமுறைகள் மாறினாலும், தங்கள் கிராமத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றனர்.
அந்த கிராமத்தினர் தங்களுக்கென பிரத்தியேகமாக இணையத்தளம் ஒன்று நடத்தி வருகின்றனர். அதன் மூலம், அக் கிராமத்தினர் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.
“சங்கா கேம்” கிராமத்தின் உள்கட்டமைப்பு, கிராமத்தின் வளர்ச்சி, அங்கு புதிதாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிர்வாக முறை உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும், அந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், அந்த கிராமத்தினரின் பெயர்கள், முகவரி, தொலைபேசி எண்கள் உட்பட அனைத்து விவரங்களும் உள்ளன. மேலும், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்கள், சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்தும், இணையத் தளத்தில் போடப்படுகின்றன. அந்த இணையத்தளத்தை ஓய்வு பெற்ற, ஆடைத் துறை நிபுணர் விஜய் பட்டேல் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இது குறித்து விஜய் பட்டேல் கூறியதாவது:- பிழைப்புக்காக, எங்கள் கிராமத்தினர் உலகின் பல்வேறு பகுதிக ளுக்கு குடிபெயர்ந்து, அங்கேயே , தங்கிவிட்டனர். தலைமுறைகள் மாறிவிட்டதால், அவர்களது வாரிசுகளுக்கு இந்த கிராமம் பற்றியும், தங்களது உறவினர்கள் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, தங்கள் உறவினர்களைப் பற்றியும், கிராமத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு எங்கள் இணையதளம் உதவியாக இருக்கிறது. தற்போது இந்த இணையத் தளம் மூலம், பல்வேறு நாடுகளில் உள்ள எங்கள் கிராமத்தினர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். கிராம வளர்ச்சி யிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு விஜய் பட்டேல் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக