செவ்வாய், 31 ஜனவரி, 2012

எக்ஸ்போ எயார் ஒரு மணித்தியாலத்தில் யாழ்ப்பாணம் செல்லலாம்

1997 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொண்டு வரும் எக்ஸ்போ எயார், தனது கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை மீள் ஆரம்பித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தொடர்ச்சியாக எந்தவித தடங்கல்களுமின்றி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விமான சேவைகளை மேற்கொண்ட நிறுவனமாக எக்ஸ்போ எயார் திகழ்ந்தது.

தற்போது தனது புதிய விமானத்தின் மூலமும் புதிய விமான கால அட்டணையுடனும் எக்ஸ்போ எயார் வர்த்தக நோக்கில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளவர்களுக்கு ஒரு மணித்தியாலயத்தில் யாழ்ப்பாணம் எனும் தனது வாக்குறுதிக்கு அமைவாக செயற்பட திட்டமிட்டுள்ளது. புதிய செஸ்னா கிராண்ட் கரவன் 12 ஆசனங்களை கொண்ட விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

லெதர் ஆசனங்களை கொண்டதும், பிரத்தியேக வாசிப்பு விளக்குகள், காற்று வரக்கூடிய பகுதி மற்றும் சிறிய தொலைக்காட்சி திரை மூலம் அமைதியான முறையில் திரைப்படங்களை ஒளிபரப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரு பிரத்தியேக பராமரிப்பாளர்களின் மூலம் பணிகளின் வசதியும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் தனது சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ள எக்ஸ்போ எயார் கொழும்பு இரத்மலானை விமான நிலயத்திலிருந்து தினந்தோறும் 07.00 மணிக்கும் 16.15 மணிக்கும் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலிருந்து 08.45 மணிக்கும் 16.45 மணிக்கும் தனது சேவைகளை மேற்கொள்ளவுள்ளது.

ஒரு வழிப் பயணமாக 10,000 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இரு வழிக்கடடணமாக 19100 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபருக்கும் 15 கிலோ எடையுடைய பயணப் பொதிகளை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

மேலதிகமான ஒவ்வொரு கிலோவுக்கும் 150 ரூபா அறவிடப்படும். பலாலி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி விமான நிலையத்துக்கும் பயணிப்பவரின் பாதுகாப்பும் வசதியும் கருதி எக்ஸ்போ எயார் விசேடமான போக்குவரத்து ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளது.

1997 முதல் எக்ஸ்போ எயார் பயணிகளுக்கு அர்ப்பணிப்பான உயர்தரமான பாதுகாப்பு கடப்பாடுகள் நிறைந்த பயணச் சேவை வழங்கி வருவதன் காரணமாக உள்நாட்டு விமானப் பயணிகளின் முதற் தர தெரிவாக அமைந்துள்ளது.

எக்ஸ்போ எயார் நிறுவனம் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான தினசரி பயணிகள் விமான சேவையை 2002 ஆம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் ஆர்பித்தது. முதல் பயணிகள் விமான சேவை 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

உக்கிரமாக யுத்தம் நடைபெற்ற காலங்களிலும், தங்குதடையின்றி தனது விமான சேவைகளை மேற்கொண்டிருந்தது. இக்காலப் பகுதியில் சுற்றுலாவுக்காகவும் வர்த்தக நோக்கத்திற்காகவும் யாழ்ப்பாணம் பயணிப்போரின் முதற்தர தெரிவாக அமைந்துள்ளது.

தனது விமானத்தை தொடர்ச்சியாக மெருகேற்றியிருந்ததுடன், நாளாந்தம் தனது 52 இருக்கைகளை கொண்ட Fokker F27-500 விமானத்தின் மூலம் 3 – 4 தடவைகள் பறப்பையும் மேற்கொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு தரைப் பாதை மக்கள் பாவனைக்காக முழுமையாக திறக்கப்பட்டதை தொடர்ந்து தனது விமான சேவைகளை தற்காலிகமாக எக்ஸ்போ எயார் இடைநிறுத்தியிருந்தது.

மேலதிக விபரங்களுக்கும், விமான ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்வதற்காகவும் www.expoavi.com எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்


எக்ஸ்போ எயார் பற்றி :

விமான சேவைகளை இலங்கையில் வழங்குவதில் எக்ஸ்போ ஏவியேஷன் நிறுவனம் முன்னோடியாக திகழ்கிறது. சரக்கு விமான சேவைகளை சர்வதேச ரீதியில் மேற்கொள்வதற்காக இலங்கை சிவில் விமான போக்குரவத்து ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட முதலாவது தனியார் விமான சேவை வழங்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்போ ஏவிஷேயன் முதலீட்டு சபையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்பதுடன், Fokker F27, IL-18 (Freighter) மற்றும் AN – 12(Freighter), சரக்கு போக்குவரத்துக்காக DC - 18 பயணிகள் போக்குவரத்துக்காக 12 இருக்கைகளை கொண்ட செஸ்னா கிராண்ட் கரவன் ரக விமானத்தையும் கொண்டுள்ளது.

இந்த விமான சேவைகள் அனைத்தும் நிபுணத்துவம் வாய்ந்த விமானிகளின் மூலம் இயக்கப்படுகின்றன. 9 வருடகால பயணிகள் சேவையின் மூலமும் 15 வருட கால சரக்கு போக்குவரத்து சேவையின் மூலம் எக்ஸ்போ ஏவியேஷன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. இலங்கையினுள் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கான ஆகாய மூல போக்குவரத்தின் போது எக்ஸ்போ ஏவியேஷன் களிப்புடனும், வசதியுடனும் பயணிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகிறது.

இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு விரைவானதும், பாதுகாப்பானதும் சரக்கு சேவைகளையும் எக்ஸ்போ எயார் வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில், கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் அதிசிறந்த தங்குமிட சேவைகளையும் எக்ஸ்போ எயார் வழங்குகிறது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல