விண்டோஸ் 7ல் உள்ள போல்டர்கள் சிலவற்றில் பேட்லாக் ஐகான்கள் இருக்கின்றன.அவற்றை நீக்குவதற்கு என்ன முயன்றும் முடியவில்லை. இவை எதற்காக அவற்றில் இடம் பெற்றுள்ளன? மேலும் அவை இடம் பெறாமல் இருக்க என்ன வழி?.
மற்ற விண்டோஸ் பதிப்புகளைப் போலவே, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், பல பயனாளர்கள் ஒரு கம்ப்யூட்டர் அல்லது நெட்வொர்க்கினைப் பயன்படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட வரையறைகள் வழங்கப் படுகின்றன. பைல்கள் மற்றும் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த சிலருக்கும், அவற்றில் மாற்றங்கள் செய்திட சிலருக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இவை Administrator, Standard User, Guest என அழைக்கப்படுகின்றன. ஒருவர் மேற் கொண்ட செயல்பாடுகளில் மற்றொருவர் மாற்றங்களை ஏற்படுத்தினால், அது சிக்கல்களிலும் குழப்பத்திலும் முடியலாம்.
எனவே, ஒருவர் ஏற்கனவே தான்பயன்படுத்திய, அனைவருக்கும் பொதுவான ஒரு போல்டரைப் பயன்படுத்த முயற்சிக்கையில், தங்க நிறத்தில், ஒரு பேட்லாக் அந்த போல்டரின் ஐகானுக்கு அருகில் இருந்தால், நிச்சயம் அவர் திகைத்துப் போய் விடுவார். இதற்குக் காரணம், இறுதியாகப் பயன் படுத்திய மற்றொருவர், அதனைப் பயன்படுத்தும் சுதந்திரத்தினை மற்றவர்களுக்குத் தடை செய்து, போல்டரைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததே ஆகும்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பயனாளர் ஒருவர், இது போன்ற போல்டர்களில் உள்ள தகவலைப் பல நிலைகளில் மறைத்துவிடலாம். இதனைக் கீழ்க்காணும் வழிகளில் அமைக்கலாம். பைல் போல்டர் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் Security மீது கிளிக் செய்தால், எந்த எந்த வகைகளில் போல்டரைப் பயன்படுத்த யாருக்கு அனுமதிக்கலாம் என்பதற்கான வழிகள் கிடைக்கும். போல்டரில் இருப்பவற்றைப் பார்க்க, திருத்த, மாற்றி அமைக்க எனப் பல நிலைகளில் செட் செய்திடலாம். ஆனால், இப்படியே பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒரு போல்டரின் அனுமதியை மாற்றி அமைத்தால், குழப்பம் தான் மிஞ்சும். மேலும், ஒரு Standard User இந்த அனுமதியை மாற்றி அமைக்கலாம்; ஆனால், அட்மினிஸ்ட் ரேட்டர்தான் இறுதியில் எந்த மாற்றத் தினையும் மேற்கொள்ள உரிமை பெற்றவர்.
எனவே, இதுவரை வழக்கமாகப் பயன் படுத்தி வந்த ஒரு போல்டரில் திடீரென பூட்டு ஐகான் தென்பட்டால், அதனைப் பயன்படுத்திய ஒருவர், அனுமதிகளை மாற்றி, மேலும் அது மாற்றப்படாமல் இருக்க போல்டரைப் பூட்டி வைத்து விட்டார் என்று பொருள்.
இந்நிலையில் முதலில் அந்த போல்டரின் அனுமதிக்கான செட்டிங்ஸ் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும்.
1. பைல் போல்டரில் ரைட் கிளிக் செய்து Properties, Security டேப் எனச் செல்லவும். அங்கு Group or user namesல், நீங்கள் லாக் இன் செய்த உங்கள் பெயர் உள்ளதா எனப் பார்க்கவும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உள்ள Permissions for பாக்ஸில் நீங்கள் தேர்ந்தெடுத்த யூசர் அக்கவுண்ட்டிற்கு என்ன என்ன அனுமதி தரப்பட்டுள்ளது என்று காட்டப்படும். இந்த அனுமதிப் பட்டியலில், அந்த போல்டருக்குச் சம்பந்தமில்லாத ஏதேனும் இருக்கிறதா எனப் பார்க்கவும். அதாவது அந்த போல்டருக்கு முழு அனுமதி அளிக்கலாம் என்று இருக்க வேண்டிய நிலையில், அனுமதி முழுவதுமாக மறுக்கப்பட்டதாக இருக்கலாம். இவ்வாறு ஏதேனும் தவறாக இருந்தால், டயலாக் பாக்ஸில் நடுவில் இருக்கும் Edit பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், யாருக்கு அனுமதி தவறாக செட் செய்யப்பட்டுள்ளதோ, அந்த பயனாளரைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Permissions for (NAME) என்பதன் கீழாக, Full Control, என்பதில் டிக் அடையாளத்தினை மேற்கொள்ளவும். பின்னர் Apply பட்டன் மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது போல்டரை அடுத்துள்ள பேட்லாக் ஐகான் மறைந்திருக் கும். ஆனால் இன்னும் சில அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தால், பேட்லாக் ஐகான் தொடர்ந்து காட்டப்படும்.
மாற்றங்களைப் பலமுறை நீக்கிய பின்னரும் தொடர்ந்து பேட்லாக் சின்னம் இருந்தால், அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்து, பேட்லாக் ஐகானை நீக்கலாம். அல்லது, போல்டரில் உள்ள அனைத்து பைல்களைக்கும் பேக் அப் எடுத்து, இன்னொரு போல்டரில் வைத்துவிட்டு, பேட்லாக் ஐகான் உள்ள போல்டரை நீக்கிவிடலாம். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இந்த பேட்லாக் ஐகான் பிரச்னை இருந்து கொண்டுதான் உள்ளது எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். தீராத புதிராகத்தான் இது உள்ளது என்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக