திங்கள், 23 ஜனவரி, 2012

Office 2010ல் பழைய மெனு

MS Office 2003லிருந்து, Office 2007 மற்றும் Office 2010 தொகுப்பிற்கு மாறியவர்கள், வேர்ட் தொகுப்பில் லைன் ஸ்பேசிங் முன்பு போல் இல்லாததனைப் பார்த்திருப்பார்கள். ஆனால் வித்தியாசம் அவ்வளவாக இல்லாததால், அது குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.

வேர்ட் 2003 தொகுப்பில், மாறா நிலையில் லைன் ஸ்பேசிங் 1; ஆனால் வேர்ட் 2007, வேர்ட் 2010 தொகுப்புகளில் இது 1.15. இதனைச் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஹோம் டேப்பில், Paragraph குரூப்பில், Line and Paragraph Spacing என்பதில் கிளிக் செய்திடவும். அங்கே 1.15 என்று காட்டும். இதற்குக் காரணம், மைக்ரோசாப்ட், லைன் ஸ்பேசிங் 1 ஆக இருப்பதைக் காட்டிலும், 1.15 ஆக இருப்பது படிப்பதற்கு சற்று எளிதாக உள்ளது என்று எண்ணி, மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதுதான்.

ஆனால், வேர்ட் 2003 பயன்படுத்திப் பழக்கப்பட்டவர்களுக்கு, அல்லது புதிய 2007 மற்றும் 2003 என இரண்டினையும் அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு, இது சற்று வித்தியாசமான அனுபவத்தினைத் தரும். இதனை மாற்றி, 2007 மற்றும் 2010 தொகுப்புகளிலும், லைன் ஸ்பேசிங் 1 என இருக்க சில வழிகள் மூலம் மாற்றி அமைக்கலாம்.

1. ஹோம் டேப் கிளிக் செய்திடவும்.

2. Styles குரூப்பில், Change Styles என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Style Set என்பதனைத் தேர்ந் தெடுக்கவும்.

3. கிடைக்கும் பட்டியலில் Word 2003 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இந்த மாற்றத்தினை மாறா நிலையில் வைத்திட, Change Styles என்ற கீழ்விரி மெனுவில் Set As Default என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில் என்ன பிரச்னை என்றால், லைன் ஸ்பேசிங் மட்டும் மாறாது. வேறு சில அம்சங்களிலும் மாற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாக, வேர்ட் 2003 பத்திகளுக்கு இடையே ஒரு வரி இடைவெளியினை ஏற்படுத்தாது. ஆனால், வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 ஆகியன இதனை ஏற்படுத்தும். எனவே மாற்றத்திற்குப் பின்னர், இந்த வரி இடைவெளி ஏற்படாது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல