விண்டோஸ் 7ல், ஸ்டார்ட் மெனுவில் அதனுடன் வந்த கேம்ஸ் காட்டப்படுகின்றன. அவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்குவதற்கான வழி...
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் கேம்ஸ் புரோகிராம்கள், இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் வகையில் மாறா நிலையில் அமைக்கப்படுகின்றன.
இவற்றை நாளடைவில் நாம் விரும்புவதில்லை. இவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்கக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளுங்கள். Start மெனு செல்லவும். %AllUsersProfile%\Microsoft \Windows\Start Menu\ என்ற வரியைச் சரியாக சர்ச் பாக்ஸில் டைப் செய்து என்டர் தட்டவும். ஸ்டார்ட் மெனுவில் இருப்பவை லோட் செய்யப்படும். (விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், புரோ கிராம் ஷார்ட் கட்களை அனைவரும் பயன்படுத்துமாறு அமைத்துவிடுகிறோம்.
எனவே கேம்ஸ் ஷார்ட்கட் பிரிவுகள் காட்டப்படுகின்றன.) இப்போது என்டர் தட்டவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். “Programs” என்ற போல்டரில் டபுள் கிளிக் செய்திடவும். இனி அனைத்து அப்ளிகேஷன்களும் “All Programs” என்பதின் கீழ் பட்டியலிடப் படும். இனி, கேம்ஸ் (“Games”) போல்டருக்குச் செல்லவும். இதில் ரைட் கிளிக் செய்திடவும். காண்டெக்ஸ்ட் மெனுவில் “Cut” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இந்த போல்டரை டெஸ்க்டாப் அல்லது ஏதேனும் ஒரு போல்டருக்குள்ளாக அமைக்கவும். இதன் பின்னர், கேம்ஸ் போல்டர் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் தெரியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக