எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், நெட்டு வரிசைகளைப் படுக்கை வரிசைகளாகவும், படுக்கை வரிசைகளை நெட்டு வரிசை களாகவும் மாற்றி அமைக்க
என்றே ஒரு கட்டளை உள்ளது. Transpose என்பது அது. எடுத்துக்காட்டாக ஒரு அட்ட வணையில் (Table) 3 படுக்கை வரிசையும் (Rows) 5 நெட்டு வரிசையும் (Column) அமைத்துவிடுகிறீர்கள். ஆனால் பின்னர் இதனை 5 படுக்கை வரிசை 3 நெட்டு வரிசையாக அமைக்க விரும்பினால் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதிலும் இரண்டு வழி உள்ளது. உங்களுக்கு எளிய வழியைச் சொல்கிறேன். முதலில் எந்த டேபிளில் உள்ள வரிசைகளை மாற்றி அமைக்க விருப்பமோ அவற்றை செலக்ட் செய்து காப்பி செய்திடவும். பின்னர் டேபிளுக்கு வெளியே வந்து ஒரு செல்லில் கர்சரை வைத்திடவும். பின் Edit––>>Paste Special கட்டளையைக் கொடுங்கள். அதன் பின் Transpose என்னும் செக் பாக்ஸைத் தேர்வு செய்து ஓகே கொடுங்கள். பழைய டேபிளுக்குக் கீழாக நீங்கள் விரும்பியவகையில் தகவல்கள் எதுவும் மாறாமல் படுக்கை வரிசை நெட்டு வரிசையாகவும் நெட்டு வரிசை படுக்கை வரிசையாகவும் மாறி அட்டவணை அமைக்கப்பட்டிருக்கும். பழைய அட்டவணையை இப்போது அழித்து விடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக