புதன், 1 பிப்ரவரி, 2012
பேஸ்புக் தளத்தின் அக்கவுண்ட் பாஸ்வேர்டினை மாற்றும் வழி
முதலில் பேஸ்புக் தளத்தில் வழக்கமான பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்து கொள்ளுங்கள். மேல் வலது புறம் உள்ள கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும்.கிடைக்கும் மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் Account Settings பக்கத்தில், பாஸ்வேர்ட் பீல்டில் வலதுபுறம் உள்ள Edit என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும். அநேகமாக இது நான்காவதாக இடம் பெற்றிருக்கும். இப்போது மூன்று பீல்டுகள் கிடைக்கும். இதில் முதலாவதாக, இப்போதைய பாஸ்வேர்டினையும், அடுத்த இரண்டு பீல்டுகளில், நீங்கள் கொடுக்க விரும்பும் புதிய பாஸ்வேர்டினையும் தரவும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்க வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது பீல்டுகளில், புதிய பாஸ்வேர்ட் சரியாக டைப் செய்யப்பட வேண்டும். அடுத்து நீல வண்ணத்தில் உள்ள Save Changes என்ற பாக்ஸில் கிளிக் செய்திட வும். இப்போது உங்கள் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் தளத்திலிருந்து உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு “You recently changed your Face book password. As a security precaution, this notification has been sent என ஒரு செய்தி அஞ்சல் அனுப்பப்படும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக