யுத்தத்தின் போது பெரும்பாலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது புலிகளும், இராணுவமும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் என கோருவதில் அர்த்தம் இல்லை என சுமந்திரன் தெரிவித்தார்.
போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் பொதுமக்களை இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அனுமதித்திருந்தால் பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். இதனாலேயே பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு திட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்தை தான் தமிழர்கள் முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக