இந்திய அனைத்து கட்சி பாராளுமன்ற குழு ஏப்ரல் 16ம் திகதி இலங்கை வருகிறது
அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்த நிலையில் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டது.
5 மாநில தேர்தல் முடிந்து விட்டதால், அடுத்த மாதம் (ஏப்ரல்) எம்.பி.க்கள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இது பற்றி எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினர் அடுத்த மாதம் 16-ம் திகதி புறப்பட்டு செல்கிறார்கள்.
21-ம் திகதி திரும்புகிறோம். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை எம்.பி.க்கள் பார்வையிடுகிறார்கள். தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கிறோம். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக