ஜேர்மனி நாட்டு கோடீஸ்வரர் ஒருவர், ஈக்குவேடார் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 18 மாதங்கள் தன் வீட்டில் அடைத்து வைத்து வேலை வாங்கி கொடுமைப் படுத்தியுள்ளார்.
ஈக்குவேடார் நாட்டைச் சேர்ந்த ரோஸா-மரியா ஜே(வயது 18) ஆவார்.
இவரை ஜேர்மனியின் ஹேம்பர்க்கின் புறநகர் பகுதியில் உள்ள கோடீஸ்வரர் ஒருவர், தன் வீட்டில் வேலை பார்க்க அழைத்து வந்தார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த ரோஸா மரியா, கோடீஸ்வர வீட்டில் வேலை பார்க்க போகிறோம் என்று ஏராளமான கனவுகளோடு வந்தாள்.
தன் முதலாளி வீட்டில் நீச்சல் குளம் இருக்கும், தோட்டம் இருக்கும், சுதந்திரமாக சுற்றித் திரியலாம் என்ற ஆசையுடன் வந்தவரை வெளியில் விடாமல் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து ஜேர்மனிய கோடீஸ்வர குடும்பம் கொடுமைப்படுத்தியுள்ளது.
ரோஸா சம்பளம் கேட்டபோது, முதலில் இரண்டாண்டு ஒப்பந்த காலம் முடியட்டும் என்று இரக்கமில்லாமல் கூறியுள்ளனர்.
குடும்பத்தினருக்கு சமைத்த உணவை இவளுக்கு வழங்கவில்லை. அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்பு இவளைத் தனியாக சமைத்து சாப்பிடுமாறு மிரட்டியுள்ளனர்.
ஒரு நாளைக்கு 14 மணி நேரம் கூட இவள் வேலை பார்த்துள்ளாள். இவளுக்கு வேண்டிய உணவுப்பொருளை வாங்குவதற்காக மட்டும் இவளை ஒரு கடையில் இறக்கிவிடுவார்கள்.
இந்நிலையில் கடையிலிருந்த காசாளர் உதவியுடன் இவள் அந்த வீட்டை விட்டு வெளியேறி மனித உரிமை அமைப்பினரிடம் சென்று புகார் அளித்தார்.
கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இவரைக் காப்பாற்ற உதவினார். மேலும் அந்தக் கோடீஸ்வர குடும்பத்தினர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
20,000 யூரோ நஷ்ட ஈடு கோரியதில் 15,000 மட்டுமே அவர்கள் கொடுக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் ரோஸாவின் சட்டத்தரனி இந்தத் தொகையை விட நான்கு மடங்கு கூடுதலாக வாங்கலாம் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக