கடந்த ஆண்டு நவம்பரில் கனடா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான திரு மாவை சேனாதிராஜாவிற்கு விசா வழங்குவதற்கு கனடியத் தூதரகம் பின்னடித்துள்ளது.
இந்தக் குழுவினர் உத்தியோகபூர்வமாக வருகை தந்திருந்ததன் பிற்பாடு பாரளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் கனடியத் தமிழ்க்காங்கிரஸின் பொங்கல் விழாவிற்கான சிறப்பு விருந்தினராக கனடா செல்வதற்கு கனடியத் தூதரகம் விசா வழங்கியிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இடம்பெற்ற பத்திரிகையொன்றின் நிகழ்விற்கு செல்வதற்காக சில வாரங்களிற்கு முன்னர் திரு. மாவை சேனாதிராஜா விசாவிற்கு விண்ணப்பித்திருந்த போதும். கனடாவிலிருந்து பதில் வரவில்லை என்ற காரணம் கூறி விசா விண்ணப்பம் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வாரமும் கனடாத் தூதரகத்திற்கு மாவை சேனாதிராஜா சென்றிருந்த போதும் அவருக்கு அதே காரணம் கூறப்பட்டதையடுத்து தான் கலந்து கொள்ள வேண்டிய விழா முடிவடைந்து விட்டது எனக் காரணம் கூறி அவர் தனது கடவுச்சீட்டை தூதரகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார். சுமார் நான்கு மாதங்களிற்கு முன்னர் கனடாவிற்கு சென்றிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் கனடா செல்வதற்கு வெளிநாட்டலுவல்கள் பணியகம் கனடாவிலிருந்து பதில் வரவில்லை என்று கூறியது வியப்பிற்குரியதாக நோக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக