சேர்பிய ஆயுதக்குழுவொன்று தமது குழுவைச் சேர்ந்த எதிராளி ஒருவரை சுத்தியலால் தாக்கிக் கொன்று கூரிய கத்தியால் அவரது உடலிலுள்ள தோலை உரித்து எலும்பை நீக்கி தசைப்பகுதிகளை இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் அரைத்து உண்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.
தோலை உரித்து முகமூடி தயாரிப்பு
இந்த ஆயுதக் குழுவினர் தமது எதிராளியான மிலன் ஜுரிஸிக்கின் (37 வயது) உடலிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட தோலைப் பயன்படுத்தி முகமூடி தயாரித்ததுடன், எலும்புகளை மட்றித் நகரிலுள்ள மன்ஸா னரெஸ் ஆற்றில் வீசியுள்ளனர்.
இந்நிலையில், குரோஷிய தலைநகர் ஸக்செப்பில் வைத்து கைது செய்யப்பட்ட “பட்சர்' (இறைச்சி வெட்டுபவர்) என்று செல்லமாக அழைக்கப்படும் மேற்படி ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஸ்ரெட்கோ கலினிக் மூலமே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, மிலன் ஜுரிஸிக் படுகொலை செய்யப்பட்ட மாடிக்குடியிருப் புக்கு அருகிலிருந்த ஆற்றுப் பகுதியிலிருந்து 50 க்கு மேற்பட்ட மனித எலும்புகள் கடந்த வாரம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி சேர்பிய ஆயுதக்குழுவின் உறுப்பினரான மிலன் ஜுரிஸிக், தனது சகாக்களிடம் பணத்தைத் திருடியதையடுத்தே சினமடைந்த அக்குழுவினர் அவரைக் கொன்றதாக கூறப்படுகிறது.
2003 ஆம் ஆண்டில் மறைந்த சேர்பியப் பிரதமர் ஸொரான் டிஜின்ட்ஜிக்கை கொலைசெய்த குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒருவராக மிலன் ஜுரிஸிக் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

தோலை உரித்து முகமூடி தயாரிப்பு
மிலன் ஜுரிஸிக்கின் (37 வயது)
ஸ்பெயினின் தலைநகரான மட்றித்தில் மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது.இந்த ஆயுதக் குழுவினர் தமது எதிராளியான மிலன் ஜுரிஸிக்கின் (37 வயது) உடலிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட தோலைப் பயன்படுத்தி முகமூடி தயாரித்ததுடன், எலும்புகளை மட்றித் நகரிலுள்ள மன்ஸா னரெஸ் ஆற்றில் வீசியுள்ளனர்.
இந்நிலையில், குரோஷிய தலைநகர் ஸக்செப்பில் வைத்து கைது செய்யப்பட்ட “பட்சர்' (இறைச்சி வெட்டுபவர்) என்று செல்லமாக அழைக்கப்படும் மேற்படி ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஸ்ரெட்கோ கலினிக் மூலமே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, மிலன் ஜுரிஸிக் படுகொலை செய்யப்பட்ட மாடிக்குடியிருப் புக்கு அருகிலிருந்த ஆற்றுப் பகுதியிலிருந்து 50 க்கு மேற்பட்ட மனித எலும்புகள் கடந்த வாரம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி சேர்பிய ஆயுதக்குழுவின் உறுப்பினரான மிலன் ஜுரிஸிக், தனது சகாக்களிடம் பணத்தைத் திருடியதையடுத்தே சினமடைந்த அக்குழுவினர் அவரைக் கொன்றதாக கூறப்படுகிறது.
2003 ஆம் ஆண்டில் மறைந்த சேர்பியப் பிரதமர் ஸொரான் டிஜின்ட்ஜிக்கை கொலைசெய்த குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒருவராக மிலன் ஜுரிஸிக் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக