பண்டா கரடியின் மலம் சேர்க்கப்பட்ட உலகின் மிகவும் விலையுயர்ந்த தேநீர் விற்பனைக்கு விடப்படவுள்ளது.இந்த சேதன மூலப்பொருட்களை உள்ளடக்கிய தேநீரானது உடல்நலத்துக்கு மிகவும் உகந்ததென மேற்படி தேயிலையை தயாரித்துள்ள சீன தொழில் முயற்சியாளரான அன் யன்ஷி (41 வயது) தெரிவித்தார்.
சீனாவின் சிசுவான் மாகாணத்திலுள்ள யான் மலை பிராந்தியத்தில் வளர்ந்த தேயிலைச் செடிகளிலிருந்து பெறப்பட்ட தேயிலையையும் அப்பிராந்தியத்துக்கு அண்மையிலுள்ள விலங்குப் பராமரிப்பு நிலைய மொன்றைச் சேர்ந்த பண்டா கரடிகளிடமிருந்து பெறப்பட்ட மலத்தையும் பயன் படுத்தி இந்த புதிய வகை தேநீர் தயாரிக் கப்பட்டுள்ளது. பண்டா கரடிகள் காட்டு மூங்கில்களை மட்டுமே உட்கொள்கின்றன.
அவற்றிலுள்ள 30 சதவீத போஷாக்குகள் மட்டுமே பண்டா கரடிகளால் அகத்துறிஞ்சப்படுகின்றன. ஏனைய 70 சதவீத போஷாக்குகள் மலத்துடன் வெளியேற்றப்படுகின்றன,.
பண்டா கரடிகள் சேதனப் பசளைகளை உருவாக்கும் இயந்திரமாகச் செயற்படுவதாகத் தெரிவித்த அன் யன்ஷி, தனது புதிய தேநீர் பானமானது கழிவுகளிலிருந்து பயன்பாடுமிக்சாரத்தை ஊக்குவித்தல், சேதனப்பசளைகளை பயன்படுத்தல் என்பன தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுவதை நோக்காகக் கொண்டுள்ளதாக கூறினார்.
அன் யன்ஷி தனது புதிய வகை தேநீரை அறிகப்படுத்தும் நிகழ்வின்போது பண்டா கரடிபோன்று வேடமிட்டிருந்தார்.முன்னாள் ஆசியரும் ஊடகவியலாளருமான அன் யன்ஷி, தனது புதிய வகைத் தேயிலையின் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதிக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த புதிய வகை தேயிலையிலிருந்து தயாக்கப்பட்ட ஒரு கிண்ண தேநீரின் விலை சுமார் 130 ஸ்ரேலிங் பவுணாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக