விண்டோஸ் 2007 பயன்படுத்துபவர்கள், தங்கள் எக்ஸ்புளோரர் திறக்கப்படும் போல்டர் குறித்து சிறிய ஆச்சரியம் அடைந்திருப்பார்கள். விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டவுடன் அவர்கள் முதலில் சந்திப்பது Libraries. இது சரி, ஆனால் எதற்காக இந்த போல்டரில் சென்று நான் இதனைத் திறக்க வேண்டும்? எனவும் பலர் எண்ணலாம்.
எனக்கு எந்த போல்டரில் அடிக்கடி வேலை இருக்குமோ, அந்த போல்டரில் திறக்கலாமே என்று விரும்பலாம். இவ்வாறு நாம் விரும்பும் போல்டரில் திறப்பதற்குரிய வசதியை விண்டோஸ் 2007 கொண்டுள்ளது. சர்ச் பாக்ஸில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என டைப் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். அடுத்த விண்டோவில் Shortcut என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுத்து அதில் Target என்பதனை அடுத்துள்ள டெக்ஸ்ட் பாக்ஸினைக் கண்டுபிடிக்கவும். இதில் %windir%\explorer.exe என டைப் செய்து, இதனை அடுத்து நீங்கள் எந்த போல்டரில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனை டைப் செய்திடவும்.
இதற்குப் பதிலாக இன்னொரு வழியையும் மேற்கொள்ளலாம். திறக்கப்பட விரும்பும் போல்டருக்கு முதலில் செல்லவும். அங்கு முகவரிக்கான பாக்ஸில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Copy address as text என்பதைக் கிளிக் செய்திடவும். பின் பாக்ஸில் இதனை பேஸ்ட் செய்தபின் Apply கிளிக் செய்து, அதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இனி மீண்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தால், நீங்கள் விரும்பிய போல்டரில் அது திறப்பதனைப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக