நோட்புக் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி.போர்ட் இரண்டும் யு.எஸ்.பி. 2 வகை வேகம் கொண்டவை ஆகும். டிஜிட்டல் கேமரா ஒன்றினை, ஒரு போர்ட்டில் இணைத்த போது, ஒரு எச்சரிக்கை செய்தி கிடைத்தது. இணைக்கப்படும் சாதனம் நல்ல வேகத்தில் இயங்க வேண்டும் என்றால், யு.எஸ்.பி. 2 போர்ட்டில் இணைக்கவும் என்று அதில் காட்டப்பட்டது. இது ஏன்? இதனை எப்படி நீக்கலாம்?
உங்கள் நோட்புக் கம்ப்யூட்டருக்கான BIOS செட்டிங்ஸை சிறிது மாற்றினால் சரியாகிவிடும். இதனைக் கீழே குறித்துள்ளபடி கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
நோட்புக் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின் உடனே இயக்கவும்.
அதன் முதல் டெஸ்ட் ஸ்கிரீன் தோன்றுகையில் எப்2 (F2) கீயை அழுத்தவும்.
இப்போது BIOS: செட் அப் ஸ்கிரீன் கிடைக்கும்.
இதில் தேதி, அப்போதைய நேரம் ஆகியவை காட்டப்படும்.
அப்போது எப்9 கீயினை அழுத்தவும். அழுத்துவதனால் பயாஸ் செட்டிங்ஸின் மாறா நிலை (Default) கிடைக்கும்.
உடனே உறுதியாக டிபால்ட் செட்டிங்ஸ் அமைக்கவா? என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.
யெஸ் என்பதை அழுத்தவும்.
மறுபடியும் எப்10 கீ அழுத்தி, மாற்றத்தை சேவ் செய்திடவும்.
மீண்டும் நோட்புக் கம்ப்யூட்டரை இயக்கவும். விண்டோஸ் மீண்டும் லோட் ஆகும்போது யு.எஸ்.பி. 2 போர்ட் மற்றும் இணைக்கப்படும் சாதனங்கள் அதற்கான வேகத்தில் இயங்கும். உங்களை பதற்றப்பட வைத்திடும் செய்திகள் வராது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக