சீனாவில் 7 மாத நிறை கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்ட சம்பவத்திற்கு அந்நாடு மன்னிப்புக்கோரியுள்ளது. சீனாவின் ஷாங்க்ஷி மாகாணத்தில் ஃபென்ங் ஜிமேய் எனும் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு குழந்தை திட்டத்தின் கீழ் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது.
இதனை ஒருவர் புகைபடமெடுத்து வெளியிட தாய், சேயின் நிலை எப்படிப்பட்டது என உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அப்புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து கடும் சர்ச்சையை எழுப்பின.
6 மாதத்திற்கு அப்பால் கருக்கலைப்பு செய்வதற்கு சீனச்சட்டத்தில் அனுமதி இல்லை. ஆக எப்படி இந்த பெண்ணுக்கு 7 மாதத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்டது என சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டனர்.
மேலும் சீனாவின் ஒரு குழந்தை திட்டத்தின் கீழ் பெண்கள் மோசமாக பாதிப்புறுவதாகவும் பல்வேறு நாடுகளிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நகர சபை அதிகாரிகள் ஃபெங் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.
மேலும் இதற்கு காரணமான வைத்தியசாலை அதிகாரிகள் மூவரை பணிநீக்கம் செய்வதாகவும் சீனா அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக