சனி, 16 ஜூன், 2012

யார் இந்த டாக்டர். பவானி? அம்மணி எதுவும் செய்வார், அவதானம் வைத்தியர்களே!

சில நாட்களாக யாழ் குடாநாடு தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் யாவற்றிலும் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருப்பது நாம் அறிந்ததே. இவற்றில் அதிகம் பேசப்பட்ட பெயர் டாக்டர். பவானியின் உடையதாகும். ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த செய்தியை அப்படியே பிரசுரித்த நாம் எமக்குக் கிடைக்கப் பெற்ற ஏராளமான விமர்சனங்கள் மற்றும் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற திடுக்கிடும் தகவல்கள் காரணமாக இந்தக் குறிப்பிட்ட வைத்தியர் யார் என்பதனை ஆராய முற்பட்டோம்.


இவர் தற்போது பணியாற்றுகின்ற, முன்பு பணியாற்றிய இடங்களில் இவரோடு பணியாற்றியவர்கள், இவரை அறிந்தவர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மற்றும் ஈ மெயில் மூலம் பல்வேறு சிரமங்களின் மத்தியில் தொடர்பு கொண்டு யார் இந்த டாக்டர். பவானி என்று அறிய முற்பட்டோம். இவர்களில் பெரும்பாலானோர் அவஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் வசித்து வருகின்றார்கள். அந்தோ ஆச்சரியம்… கிணறு வெட்ட வெட்ட தண்ணீருக்குப் பதிலாக குப்பை குப்பையாகக் கிடைத்தது. அவற்றைத் தொகுத்து இங்கே நாம் தருகின்றோம். இவரைப் பற்றித் தனியான கட்டுரை வரைவதற்கு இவர் ஒன்றும் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமோ அல்லது சாதனை வீரரோ அல்லர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர். பவானி அவர்கள் தனது கல்வி அனைத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கற்று யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட 7ம் அணியில் இணைந்து கொண்டார். இவருடன் ஆரம்பக் கல்வியைக் கற்ற தற்போது வைத்தியராக உள்ள ஒருவரின் கருத்துப்படி இவர் அமைதியான சுபாவம் கொண்டவராவார். மருத்துவ பீட கற்கைக் காலத்திலும் இவர் அமைதியான ஒருவர் என்று சக வைத்தியர்களால் வர்ணிக்கப்பட்டவர். (இவர்களுடன் ஒரே பிரவில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்றவர்கள் இன்று போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களாக இருக்கிறார்கள்.)பல்வேறு வைத்தியசாலைகளிலும் சேவையாற்றிய இவர் 98 காலப் பகுதியில் தனது வைத்திய அத்தியட்சகர் பொறுப்பை வவுனியா வைத்தியசாலையில் ஏற்றுக் கொண்டார்.

தனது பதவியைப் பொறுப்பேற்று சில மாத காலத்திலேயே அவர் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார். தமது கடமைகளை ஒழுங்காகச் செய்யாதவர்கள், பல திருட்டுக்கள் ஊழல்களில் அகப்பட்டு ஏற்கனவே மாற்றலாகி வந்தவர்கள் என இவரது உற்ற நண்பர்கள் வரிசை இருந்தது.

சில வருடங்கள் செல்வதற்குள் அங்கு பணியாற்றிய வைத்தியர்களுடன் முரண்பட்ட இவர் பல வைத்திய நிபுணர்களின் வெளியேற்றத்திற்கும் காரணமாக இருந்தார். இவரால் எந்நவொரு முன்னேற்றமான நடவடிக்கைகளும் செய்யப்படாமல் இருக்கையில் சாதாரண வைத்தியர்கள் வவுனியா வாழ் வர்த்தகர்களின் உதவியுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் வைத்திர்களுக்கான நூலகம் என்பவற்றை அமைத்து முடித்தார்கள். இவர்களால் நாட்டப்பட்ட பல்வேறு பயன்தரு மரங்கள் இன்றும் வவுனியா வைத்தியசாலை வளாகத்தினுள் பயன் தருகின்றன. இவ்வாறு முற்றிய முரண்பாடுகளினால் அனைத்து வைத்தியர்களும் ஒன்றிணைந்து நடாத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ஒரே இரவில் இவர் கொழும்பு வைத்தியசாலை ஒன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.

பின்னர் கொழும்பில் தனது மேற்படிப்பினை முடித்துக் கொண்ட இவர் 2004ம் ஆண்டளவில் மீண்டும் வவுனியா வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்ற விரும்பி வந்திருந்தார். இவர் தனது முன்னைய மாற்றலாகிச் சென்றமைக்குக் காரணமான வைத்தியர்களைப் பழிவாங்கவே மீண்டும் அங்கு விரும்பி வந்திருந்தார் எனபது அனைவரினதும் கருத்தாகும்.

2005,2006 மற்றும் 2007காலப் பகுதிகளில் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றவென ஏராளமான தமிழ், சிங்கள வைத்தியர்கள் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்நதனர். இவர்களோடு பல வைத்திய நிபுணர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். பல வைத்திய நிபுணர்கள் திட்டமிட்ட ரீதியில் தொந்தரவு கொடுக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் இருந்து துரத்தப்பட்டார்கள். இதற்கு வவுனியாவில் இயங்கிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இக்கால கட்டத்தில் யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வவுனியா வைத்தியசாலைக்கு வந்தவண்ணம் இருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கையில் வைத்திய அத்தியட்சகரின் உற்ற நண்பர் ஒருவர் ஆய்வுகூடத் தொழிநுட்பவியலாளராகக் கடமையாற்றி வந்தார். இவரினால் செய்யப்படும் இரத்த, சிறுநீர் மாதிரிகளுக்கான பெறுபேறுகள் மிகப் பிழையாகக் காணப்படுகின்றன எனக் குழந்தை வைத்திய நிபுணரினால் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் இது தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாடு எதுவித நடவடிக்கையும் இன்றிக் கிடப்பில் போடப்பட்டது. இதனால் விரக்தியுற்ற அரச மருத்துவச் சங்கத்தினர் அப்போதைய வடக்குக் கிழக்கு ஆளுநரிடம் முறையிட்டதன் விளைவாக விசேட விசாரணை நடாத்தப்பட்டுக் குறிப்பிட்ட ஆய்வுகூடத் தொழிநுட்பவியலாளரை உடனடியாக அமுலாகும் விதமாக இடமாற்றத்திற்கும் உத்தரவிடப்பட்டது. எனினும் பல்வேறு குளறுபடிகளால் அவர் தொடர்ந்தும் அங்கு பணியாற்றுவதற்கு வைத்திய அத்தியட்சகரால் பூரண ஆதரவு வழங்கப்பட்டது.

இதன் தொடர் கதையாக அப்போது அங்கு பணியாற்றிய, அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்ற கண் வைத்திய நிபுணராகிய டாக்டர். வாசுகி குருசாமி அவர்களுக்குப் பல்வேறு வகையில் நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு அவர் கண்ணீர் சிந்தியபடி வைத்தியசாலையை விட்டு வெளியேறினார். இது தொடர்பாக் கண் வைத்திய நிபுணரினால் கைப்பட எழுதப்பட்ட கடிதம் எம்மிடம் உள்ளது.

200 இலட்சம் ரூபாய்கள் மோசடி

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து வைத்தியசாலையினுள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் வைத்தியசாலை நலன்விரும்பிகள் சபையினரால் புதியதோர் பிரச்சினை முன்வைக்கப்பட்டது. கடந்த 20 வருட காலமாக வைத்தியசாலை நோயாளர் நலன் புரிச் சங்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற வருமானம் ஏறத்தாழ 200 இலட்சம் ரூபாய்களுக்கான கணக்கு எதுவும் பேணப்படாமை இவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. மாதா மாதம் கன்டீன் மற்றும் சைக்கிள் பார்க் மூலம் பெறப்பட்ட மக்களின் இப்பணம் மாயமானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் போது வெளியாருக்கு இது தொடர்பாகக் கேட்பதற்கு உரிமை இல்லை என வைத்திய அத்தியட்சகரினால் கூறப்பட்டது.

இதன் பின்னர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இது தொடர்பாக மேலும் தகவல்கள் திரட்டப்பட்ட போது பெருமளவிலான பணம் வைத்திய அத்தியட்சகர்ää கணக்காளர் மற்றும் பிரதம லிகிதர் ஆகியோரினால் சுருட்டப்பட்டது தெரிய வந்தது. இதனை அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போதைய யாழ் போதனா வைத்தியசாலை சம்பவம் போலவே வைத்திய அத்தியட்சகர் இக்குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்தார்.

தொடரச்சியாக வைத்திய அத்தியட்சகரினால் சத்திரசிகிச்சை நிபுணர்ää பொது மருத்துவ நிபுணர் மற்றும் கதிர் இயக்க வைத்திய நிபுணர் ஆகியோரின் நியமனங்கள் எதிர்க்கப்பட்டு அவர்களின் வருகை தடுக்கப்பட்டது. நிதி மோசடி, வைத்திய நிபுணர்களின் வருகை தடுக்கப்பட்டமை, வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் எதுவித அக்கறையும் கொள்ளாமை போன்றவற்றால் வெறுப்படைந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 2008இல் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடாத்தி வைத்திய அத்தியட்சகரின் இடம்மாற்றத்தினைக் கோரினார்கள். இதில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த 62 வைத்தியர்கள் ஒருமித்துக் குரல் எழுப்பினார்கள்.


இந்நிலையில் அனைவரும் எதிர்பாராத அதிசயம் ஒன்று நடைபெற்றது. அப்போதைய வவுனியா மாவட்ட அரச அதிபரினால் வைத்தியசாலை வைத்தியர்களுக்கும் வைத்திய அத்தியட்சகருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அங்கு வருகைதந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் திரு. சுமதிபால, அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு. தவச்செல்வம் மற்றும் முஸ்லிம் மத அமைப்புகள்ää இந்து மத ஒன்றியம் என்பன வைத்தியசாலையில் நடைபெறும் பல்வேறு குறைபாடுகள்ää ஊழல்கள் பற்றிக் கேள்வி எழுப்பியதுடன் வைத்திய அத்தியட்சகரை விரைவாக வேறு இடத்திற்கு மாற்றலாகிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர். இலங்கை வரலாற்றிலேயே அனைத்துக் கட்சிகளும் ஒருமித்துக் குரல் எழுப்பிய சந்தர்ப்பம் இதுவாகத் தான் இருக்கும் என்று அனைவரும் அச்சந்தர்ப்பத்தில் பேசிக் கொண்டார்கள்.

திடீர் மறைவு

இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு. தவச்செல்வம் அவர்கள் தொடர்ச்சியாக 200 இலட்சம் ரூபாய் பண மோசடி பற்றிப் பத்திரிகைகள் மற்றும் கூட்டங்கள் மூலம் கேள்வி எழுப்பி வந்தார். திடீரென ஒருநாள் மதியம் திரு. தவச்செல்வம் அவர்கள் வவுனியா ரயில் நிலையம் அருகில், அவரது வீட்டின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலைக்கான காரணங்கள் பல்வேறு முன்வைக்கப்பட்டாலும் உண்மைக் காரணத்தினையும் அவரை யார் கொன்றார்கள் என்பதனையும் திரு. தவச்செல்வமும் சிலருமே அறிவர்.

இதன் அடுத்த கட்டமாகத் தொடர் அதிர்ச்சிகள் காத்திருந்நதன. வைத்திய சேவையினை உன்னதமாகக் கருதும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சில இராணுவப் புலனாய்வாளர்கள் ஓரு நாள் இரவு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சார்ந்த குறிப்பிட்ட ஒரு வைத்தியரை அணுகி சில வைத்தியர்களுக்கு ஏற்பட இருக்கும் உயிராபத்துக்கள் தொடர்பாக அறியத்தந்தனர். வைத்திய அத்தியட்சகருடன் மிக நெருக்கமாக இருந்த ஒருவர் துணை ஆயுதக் குழுவொன்றைச் சேர்ந்த சிலரிடம் சில வைத்தியர்களைப் போட்டுத் தள்ளுவதற்குப் பேரம் பேசியதே அத்தகவல். யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் எனும் மரணங்கள் மலிந்த காலம் அக் காலம்.

மறுநாள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சில துணிச்சலான வைத்தியர்கள் நேரடியாகக் குறிப்பிட்ட துணை ஆயுதக் குழுவின் அலுவலகத்திற்குச் சென்று கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினார்கள். இதன் போது கிடைத்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகள் தெளிவாக அவர்களுக்கு விளங்க வைக்கப்பட்டன. அவர்களும் வைத்தியர்களின் விடயத்தில் தலையிடுவதில்லை என உறுதிமொழி தந்தார்கள்.

மிரட்டல் கடிதம்

திடீரென ஒருநாள் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்துத் தமிழ் பேசும் வைத்தியர்களுக்கும் மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் தமிழ் வைத்தியர்களை சிங்கள வைத்தியர்கள் மிரட்டுவது போல் தமிழில் எழுதப்பட்டிருந்தது. தமிழ், சிங்கள வைத்தியர்களின் ஒற்றுமையைக் குலைப்பதன் மூலம் தனக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் குறைக்கலாம் என்ற வைத்திய அத்தியட்சகரின் வேலையே எனப் பலத்த சந்தேகம் அப்போது முன்வைக்கப்பட்டது. பின்னர் கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இக்கடிதம் ஆனது வைத்திய அத்தியட்சகரினால் திட்டமிடப்பட்டு பிரதம லிகிதரால் அனுப்பபப்பட்டது என்பதை உறுதி செய்தார்கள். இக்கடிதங்களைத் தபால் பெட்டியில் இடும் பணியைத் தெரிந்தோ தெரியாமலோ வைத்திய அத்தியட்சகரின் அம்புலனஸ் சாரதி செய்திருந்தார்.

நீதி மன்ற வழக்கு!

இதன் பின்னர் வைத்தியசாலையினுள் வைத்திய அத்தியட்சகரின் வெளியேற்றத்தைக் கோரி தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வைத்திய அத்தியட்சகரினால் ஒழுங்கு செய்யப்பட்ட அவருக்கு ஆதரவான சிறு குழுக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்றன. இந்நிலையில் வைத்திய அத்தியட்சகரினால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சார்ந்த இரு வைத்தியர்கள் மீது தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. டாக்டர் பவானி அவர்களின் கணவர் சிறைச்சாலை வைத்திய அதிகாரியாக நெடுநாள் பணியாற்றி வருவதனால் பொலிஸாரினால் பொய்யான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது இலகுவாக இருந்தது. அப்போதைய வவுனியா மாவட்ட நீதிபதியாக இருந்த மதிப்பிற்குரிய நீதிபதி அலெக்ஸ் அவர்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை எடுத்து வழக்காட முடியாது எனக் கூறியதுடன் வைத்திய அத்தியட்சகர் அவர்களையும் குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்களையும் எச்சரித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அன்று மாலையே கொழும்பு சென்ற வைத்திய அத்தியட்சகர் பிரபல நீதிபதி ஒருவரின் வீட்டிற்குச் சென்று விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக நிராகரிக்கப்பட்ட வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றஞ் சாட்டபட்ட வைத்தியர்களுக்கு ஆதரவாக கட்டணம் எதுவும் இன்றி வவுனியாவில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒருமித்து வாதாடினார்கள். பல நாட்கள் நீடித்த இவ் வழக்கு இறுதியில் பிசு பிசுத்துப் போனது.

இது இவ்வாறு இருக்கையில் குறிப்பிட்ட இரு வைத்தியர்களுக்கும் உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்ற உத்தரவு டாக்டர். பவானியினால் வழங்கப்பட்டது. எனினும் இதனைக் கடுமையாக எதிர்த்த வவுனியாவைச் சார்ந்த பல அரசியல் கட்சிகளின் முயற்சியினால் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் இவ் இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்பட்டன.

ஜனாதிபதி ஆலோசகரின் கடிதம்

இவ்வாறு வவுனியாவைத்தியசாலையில் தொடரச்சியாக நடைபெற்ற நிகழ்வுகள் பல்வேறு பட்ட அரசியல் கட்சிகளினாலும் அரச அதிபரினாலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததன் பயனாக, ஜனாதிபதி ஆலோசகர் கடிதம் ஒன்றைச் சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைத்திருந்தார். சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளினால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் முடிவில் இவருக்கான உடனடி மாற்றல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

இவ்வளவு குற்றச் செயல்கள் புரிந்து, உடனடியாக அமுலாகும் என சுகாதார அமைச்சினால் அறிவித்தல் கிடைத்த போதிலும் டாக்டர் பவானி அவர்கள் மிக இலகுவாகத் தனது இடமாற்றத்தினைத் தள்ளிப் போட்டார். ஒரு நாள் அவர் தனியாக வவுனியா பிரிகேட் அலுவலகத்திற்குச் சென்று இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் “வன்னிப் போர் உக்கிரம் அடைந்து வருவதனாலும் வவுனியா வைத்திய சாலைக்கு அதிகளவிலான காயம் அடைந்தவர்கள் வருவதனாலும் எனது இருப்பானது உங்களுக்கு நன்மை பயக்கும்” எனக் கூறப்பட்டதாக அறிய முடிந்தது. இதனால் அவரது இடமாற்றமானது தள்ளிப்போடப்பட்டது.

2009 ஜனவரி மாத்திற்குப் பின்னர் பெருமளவிலான காயமுற்ற நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்ந காலத்தில் நடைபெற்ற பல சம்பவங்கள் அவற்றின் கனமான தன்மை காரணமாக இங்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடன் ஒத்து உறவாடிக் கொண்டிருந்தவர்களால் இறுதி இடப் பெயர்வின் போது கைவிடப்பட்ட பிணங்களின் ஆபரணங்கள் திருடப்பட்டமை தொடர்பாகவும் நிதி பெறப்பட்டு பல பிணங்கள் மாயமாய் மறைந்தமை தொடர்பாகவும் நாம் பெரிதாகக் கதைக்க விரும்பவில்லை. இவை தொடர்பாகவும் மேலும் வவுனியா வைத்தியசாலைக்கு பல்வேறு உபகரணங்கள் வாங்குவதில் இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

யாழ் போதனா வைத்தியசாலையைச் சார்ந்த வைத்தியர்களே! தங்கள் நல்லெண்ணமும் நல்ல சேவையும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவாவாகும். தாங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது தங்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதனைக் கருத்தில் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இரகசியத்தன்மை காரணமாக மேலும் சில முக்கிய விடயங்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வளவு குற்றங்களையும் செய்த ஒருவர் அவற்றிலிருந்து தப்பி மேலும் மேலும் பதவி உயர்வு பெற்றமைக்கு அப்போதைய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மறைந்த டாக்டர. குமாரவேற்பிள்ளை அவர்களும் சுகாதார அமைச்சைச் சார்ந்த சில அதிகாரிகளும் பெரிதும் உதவினார்கள் என்பது கசப்பான உண்மையாகும்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல