ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

யாழில் 1980 களில் நூறு மில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட நிதி நிறுவனம் மீது 30 வருடங்களின் பின் சட்ட நடவடிக்கை?

'சப்றா' நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்?

பாதிக்கப்பட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாடு திரும்பி அதிரடி நடவடிக்கை!

பலநூறு உழைப்பாளிகள் வர்க்க மக்களின் சேமிப்பு

பெண் பிள்ளைகளின் பெயரிலிட்ட வைப்புத் தொகை

ஓய்வூதியக்காரர்கள் நம்பிக்கையுடன் முதலிட்ட பணம்

இதுவரையில் சரியாக எண்ணிக்கை தெரியவராத பலநூறு உழைப்பாளிகள் வர்க்க ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்று ஈவிரக்கமின்றி ஏமாற்றிய சப்ரா என்றழைக்கப்படும் நிதி நிறுவனத்தில் 1993 ஆம் ஆண்டுவரை தமது பணத்தை வைப்பிலிட்ட மக்கள் அந்நிறுவனத்திற்கெதிராக வழக்குத் தொடர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

இந்நிதி நிறுவனத்தில் தமது உழைப்பை வைப்பிலிட்டுப் பின்னர் ஏமாற்றப்பட்ட நிலையில் 1990 களில் யுத்தம் காரணமாகப் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறிய மக்களே இப்போது திரும்பி வந்து வழக்குத் தொடரும் அலுவல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

அக்காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வடக்கில் மேலோங்கிக் காணப் பட்டதால் வாய்மூடியிருந்த மக்கள் இன்று சமாதானம் திரும்பி வந்துள்ள நிலையில் உரிமையாளரை குறிவைப்பதில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கொழும்பிலுள்ள பிரபல சட்டத்தரணிகளுடன் இவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட் டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்விடயத்தில் முனைப்புடன் செயற் பட்டுவரும் பெருந்தொகை பணத்தை இழந்த சிலர் இவ்வாறு மேற்படி நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அறிக்கைகளில் இந்நிறுவனத்தில் ஓய்வூதியர் கள் வைப்பிலிட்டிருந்த ஏறத்தாழ 60 மில் லியன் ரூபாய்கள் சூறையாடப்பட்டதாகவும், இதைவிட திருமணமாகாத தமது பெண் பிள்ளைகள் பெயரிலும், குழந்தைகள் பெயரிலும் பல ஏழைப் பெற்றோர்கள் வைப்பிலிட்டிருந்த ஏறத்தாழ 46 மில்லியன் ரூபாவுடன் அக்காலகட்டத்தில் அதன் உரிமையாளர் தலைமறைவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகள் இருந்த காரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் அதன் உரிமையாளரைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க முடியவில்லை. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

யாழ்ப்பாண வரலாற்றில் முதல் பெரு பண மோசடி இந்த நிதி நிறுவன மோசடியே என கூறப்படுகிறது. இந்தப் பண மோசடிப் பிரச்சினைகள் பல தற் போது நீதிமன்றின் முன் கொண்டுவரப்படு கின்றன எனினும் இதுவரையில் எவரும் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டிக்கப் பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் இதன் உரிமையாளர்களைச் சட்டத்தின் முன் கொண்டுவருதல் மூலம் யாழில் அதிகரித்துவரும் இந்த பணமோசடிப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க முடியும் என சமூக அக்கறையுள்ள பல தமிழ் புத்திஜீவிகள் கருதி செயற்படத் தொடங்கியுள்ளனர் என தெரியவருகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சப்றா நிதி நிறுவனம் பற்றி அண்மையில் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1993ம் ஆண்டு மூடப் பட்ட சப்றா நிதி நிறுவனம் தற்போது தமிழ்க் கூட்ட மைப்பிலுள்ள ஒரு முக்கிய உறுப்பினரின் குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்திருந்தது பரகசியமானது என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்திருந் தமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல