இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கருக்கும், அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் இடையே காதல் என்று வங்கதேச பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ஹீனா யார் யாருக்கு போன் செய்தார் என்ற விவரத்தை கேட்டு அவரது கணவர் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறையை அணுகியுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கருக்கும்(34), அந்நாட்டு அதிபரின் மகனும், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோவுக்கும்(24) இடையே காதல் என்று பாகிஸ்தானில் பல வாரங்களாக கிசுகிசுப்பட்டது. இந்நிலையில் வங்கதேச பத்திரிக்கை ஒன்று இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.
தன்னைவிட கிட்டத்தட்ட 11 வயது குறைவான(நவம்பரில் அவருக்கு வயது 35) பிலாவலை அவர் காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் பாகி்ஸ்தானை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாக முடிவு செய்துள்ளனராம். இது குறித்து அறிந்த சர்தாரி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஹீனாவை மணக்கக் கூடாது என்று தனது மகனைக் கண்டித்துள்ளாராம். அதற்கு பிலாவல் மணந்தால் ஹீனாவைத் தான் மணப்பேன் என்று கூறியுள்ளாராம்.
ஹீனாவை பிலாவல் மணந்தால் அவரது அரசியல் வாழ்க்கை அடியாகிவிடுமே என்ற கவலையில் சர்தாரி உள்ளார் என்று அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இந்த செய்தி உண்மையா, பொய்யா என்று பலரும் குழம்பிய நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஹீனாவின் தொழில் அதிபர் கணவரான பிரோஸ் குல்சார் தனது மனைவி யார், யாருக்கு போன் செய்து பேசுகிறார் என்ற தகவலைக் கேட்டு மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடியுள்ளாராம்.
அதிலும் குறிப்பாக ஹீனா போன் செய்யும் இரண்டு எண்கள் யாருடையது என்று தெரிந்து கொள்ள அவர் விரும்புகிறாராம். இதன் மூலம் ஹீனா-பிலாவல் காதல் வதந்தி அல்ல என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடைசியில் 'உள்துறையே' பெரும் குழப்பமாகி விட்டது கொடுமைதான்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக