புலிகளின் சட்டமா அதிபர் எனக் கூறப்படும் கிளிநொச்சியை சேர்ந்த லங்கேஸ்வரன் கைலாசபதியின் மனைவியான லதாமுனி பாலசிங்கம் என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடக வெளிநாடு செல்ல முயற்சித்த போது, அரச புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என திவயின குறிப்பிட்டுள்ளது.
அவர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடவூச்சீட்டை பெற்றுள்ளதாக
விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த பெண்ணுக்கு உதவியாக
கூறப்படும் கொழும்பை சேர்ந்த தமிழர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக
காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதுசெய்யப்பட்ட லதாமுனி பாலசிங்கம், இந்தியா சென்று அங்கிருந்து
சுவிஸர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தாக சந்தேகிப்பதாக பாதுகாப்பு
தரப்பினரின் தகவல்கள் கூறியுள்ளன. இந்த பெண் புலிகளின் மலாதி
படைப்பிரிவில் பணியாற்றியுள்ளார் எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக