கூகுல் இல்லாமல் உங்களால் ஒரு நாள், ஒரே நாள் இருக்க முடியுமா என்ற கேள்வியை கேட்பதற்காக ‘வன் டே வித்அவுட் கூகுல் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நமது உலகம் கூகுல் மயமாகி கொண்டிருக்கிறது என்றும் நாமெல்லாம் கூகுலுக்கு அடிமையாகி கொண்டிருப்பதாகவும் இதன் விளைவுகளையும் பாதிப்புகளையும் நாம் உடனடியாக உணர முடியுமா என்று தெரியவில்லை என்றும் இந்த இணையத்தளத்தை உருவாக்கியவர்கள் தெரிவித்தள்ளதுளள்னர். இந்த நிலையில் கூகுலாதிக்கம் குறித்து நம்மை யோசிக்க வைப்பதற்காக என்றே இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் வாழ்க்கையே கூகுலை சார்ந்து இருக்கிறது என்று துவங்கும் இந்த தளம் ,அதன் பிறகு தான் கூகுல் இல்லாமல் ஒரு நாள் இருக்க முடியுமா என்ற அந்த கேள்வியை கேட்கிறது.
இந்த கேள்வியின் அர்தத்தை புரிய வைக்கும் காரணங்களையும் வரிசையாக எடுத்து வைக்கிறது.
முதல் காரணம் இணையம் என்றால் கூகுல் என்றாகி இருப்பதாகும்.
இந்த கேள்வியின் அர்தத்தை புரிய வைக்கும் காரணங்களையும் வரிசையாக எடுத்து வைக்கிறது.
முதல் காரணம் இணையம் என்றால் கூகுல் என்றாகி இருப்பதாகும்.
கூகுல் என்றால் தேடியந்திரம் மட்டும் அல்லாமல் ,வலைப்பதிவு, ஜிமெயில், யூடியூப், பிக்காசோ, என அடுத்தடுத்து நமக்கு தேவையான சேவைகளை கூகுல் அறிமுகம் செய்து அது இணையத்தள சேவையின் மறுவடிவமாக மாறிவிட்டது.
இப்படி விவரிக்கும் அந்த தளம் கூகுல் இல்லாமல் இணைய உலாவல் சாத்தியமா என்று கேட்டு விட்டு அதற்கான பதிலாக ,ஜிமெயில், யூடியூப், பிக்காசோ, கூகுல் டொக்குமென்ட், குரோம், கூகுல் மப்ஸ், கூகுல் நியூஸ் உள்ளிட்ட கூகுல் சேவைகளை பட்டியலிட்டு இவை எல்லாம் இல்லாமல் இருக்க முடியுமா என்று மேலும் ஒரு கேள்வி கேட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக