சனி, 27 அக்டோபர், 2012

புலிகள் இறுதியாக நிலை கொண்டிருந்த இடத்தில் அவர்களை வெற்றி கொண்டதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றிச் சின்னத்தை பார்வையிட தமிழர்கள் செல்வதில்லை

வட ஸ்ரீலங்காவின் இதயப்பகுதியில், எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக இராணுவம் நடத்திய வெற்றிகரமான கடைசி யுத்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் அந்த வெற்றியை வலியுறுத்தும் வகையில் சக்திவாய்ந்த ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.

2009ல் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பெரும்பகுதி போர்க் காட்சிகளை கண்ட அந்த மணல்வெளியில் வெற்றியின் ஞாபகச்சின்னம் ஒன்று கம்பீரமாக எழுந்து நிற்கிறது, பெரிய கிரனைட் கற்களின் அடித்தளத்திலிருந்து எழும் பீடத்தில் வெற்றிக் களிப்புடன் நிற்கும் ஒரு இராணுவ வீரன், ஒரு கையில் ஒரு புறவைத் தாங்கிய துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடியும்,மறு கையில் ஸ்ரீலங்கா தேசியக்கொடியை பிடித்தபடியும் காட்சி தருகிறான்.

இந்த சதுர அடிப்பாகத்தின் ஒவ்வொரு மூலையிலும், கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீலங்காவின் தேசிய விலங்கான சிங்கத்தின் உருவம் காட்சியளிக்கிறது. இது ஒருகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசமாக இருந்தது என்பதின் அடையாளம் கடுமையாக மாறியிருந்தது.

பேருந்துகள் நிறைய, ஸ்ரீலங்காவின் தென்பகுதியிலிருந்து சிங்கள சுற்றுலா பயணிகள், இந்த நினைவகத்தையும் அதற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் உபகரணங்களான பீரங்கிகள்,துப்பாக்கிகள் மற்றும் கடற்புலிகளின் தற்கொலைப் படகுகள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் யுத்த அருங்காட்சியகத்தையும், பார்வையிடுவதற்காக விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த யுத்த சுற்றுலாப்பயண சுற்றுவட்டத்துக்குள், ஒரு எல்.ரீ.ரீ.ஈ சிறைச்சாலை, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் நான்கு அடுக்கு ஆழத்திலுள்ள பதுங்கு குழிக் கட்டிடம், மற்றும் கடற்புலிகள் நீச்சல் பயிற்சிக்காகப் பயன்படுத்திய ஒரு நீச்சல் தடாகம் என்பனவும் அடங்குகின்றன. கண்காட்சிக்கு அல்லாமல் திறந்த வெளி பிரதேசங்களில் இங்கும் அங்குமாக நிறுத்தப் பட்டிருக்கும்; ஒரு கவச வாகனம், நீர்மூழ்கிக் கப்பல்,2006ல் எல்.ரீ.ரீ.ஈயினரால் கைப்பற்றப்பட்ட ஜோர்தானிய கப்பலான பாராஹா என்பனவனவற்றையும் சுற்றுலா பயணிகள் நின்று பார்த்துச் செல்கிறார்கள்.

பார்வையாளர்களை, புதுக்குடியிருப்பு சந்தியில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இராணுவ காவல்துறையினர் அந்தப் பிரதேசங்களை நோக்கி வழிகாட்டிக் கொண்டிருக்கின்றனர். சந்தியிலிருந்து ஏறக்குறைய நாலரை கிலோ மீற்றர் தொலைவில் முல்லைத்தீவு வீதியில் காட்சியளிக்கும் ஒரு சிறு விளம்பரப்பலகை யுத்த அருங்காட்சியகம் என்பதை அறிவித்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறது. ஒரு இராணுவ வீரர் காட்சிப் பொருட்களின் பின்னுள்ள கதைகளை சிங்களத்தில் விளக்கியபடி பயணிகளுக்கு சுற்றி வழி காட்டிக் கொண்டிருக்கிறார்.

சில காட்சிப் பொருட்கள் கொட்டகைகளுக்குள்ளும், சில அறைகளுக்குள்ளும், மற்றும் சில திறந்த வெளியிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, தனி மனிதன் கையாளும் தற்கொலைப் படகுகள், பிரமாண்டமான அளவுள்ள பொம்மைகள், அவற்றில் ஒன்று முன்புறமாக வைக்கப்பட்டிருக்கும் நிறந்தீட்டிய சுறா மீன் பற்கள் ஆகும், மற்றும் பீரங்கிகள், ஷெல்கள்;, ராக்கெட் எறிகணைகள், மோட்டார்கள், யந்திரத் துப்பாக்கிகள், தாக்குதல் கைத்துப்பாக்கிகள், கிரனைட்டுகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், என்பன அவற்றில் அடங்கும். வெளியே சூரிய ஒளியில் மினுமினுக்கும் கடற்புலிகளின் பாரிய படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

“தினசரி 500 முதல் 700 வரையான வருகையாளர்களை; இங்கு வருகிறார்கள். வார இறுதிகளில் வருகை தருபவர்களின் எண்ணிக்கை அநேகமாக 2000 வரை இருக்கலாம்” என்று மென்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் இராணுவ சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடத்தும் ஒரு வீரர் தெரிவித்தார். அங்கு வருகை தருபவர்களில் சிலர் யுத்தத்தின்போது இராணுவ வீரரான தங்கள் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரை இழந்தவர்களாகவும் இருக்கலாம்.

எல்.ரீ.ரீ.ஈ தலைவரின் பதுங்கு குழி கட்டிட தொகுதியை பார்வையிட வரும் பயணிகள் வெளவால்களின் துர்நாற்றத்தை தைரியமாக எதிர்கொண்டபடிதான் நான்கு அடுக்குகளையும் கடந்து வந்து ,காட்டுப் பகுதிக்குள் பிரபாகரன் வடிவமைத்துள்ள ஒளிவிடத்தை நன்றாக காணமுடியும்.

“எங்கள் இராணுவத்தினரையிட்டு நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம், அதனால்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்” இவ்வாறு கூறினார், இங்கிருந்து ஏறக்குறைய 250 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குருநாகல எனும் இடத்திலிருந்து வருகை தந்திருந்த ஒரு கல்லூரி மாணவியான தயானி என்பவர், அவரது குடும்பத்தினர் எல்.ரீ.ரீ.ஈ தாங்களாகவே வடிவமைத்திருந்த நீர்மூழ்கி கப்பலைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள்.

குறிப்பிட்டுச் சொல்லும்படி சில தமிழ் மக்களும் இந்தச் சோதனையில் பலமாகத் தாக்கப்பட்டு உள்ளார்கள். யுத்த நினைவுச் சின்னம் உள்ள இடத்திலிருந்து முல்லைத்தீவு வரையான சாலையின் இருமருங்கிலும் யுத்தம் நிறைவடைந்து வெகு காலமாகிவிட்ட போதிலும், அப்போது அங்கிருந்து தப்பியோடிய மக்களின் சொந்த உடமைகளான கவலை தரும்படியாக தாறுமாறாக கலைந்து கிடக்கும் உடுதுணிகள், பானை சட்டிகள் ,பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் கோப்பைகள் என்பன இன்னமும் அங்கு சிதறிக் கிடக்கின்றன.

இந்தப் பயணத்தில் எங்களுடன் துணைவந்த தமிழர் - அவரது பெயரை குறிப்பிட முடியாது - கூறியது, அந்த அருங்காட்சியகம் தமிழர்களின் கண்களில் விரல் குத்தியதைப் போன்ற வேதனையைத் தருகிறது, அதன் காரணமாகவே இதற்கு முன் தான் பிரபாகரனின் பதுங்கு குழிக்கு விஜயம் செய்தது கிடையாது என்று.

அவர் ஒரு எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர் இல்லை, அதனால் அவரது குடும்பம் அதன் கைகளில் அகப்பட்டு துன்பப்பட்டது, அவரது தந்தையை அவர்களின் சிறையில் அடைத்து வைத்து, விடுதலை செய்வதற்கு பெருமளவு பணத்தை செலுத்தும்படி எல்.ரீ.ரீ.ஈ வற்புறுத்தியது என்றார் அவர். “ஆனால் எல்லா தமிழர்களும் செய்த தியாகத்துக்கு கிடைத்த மிச்சம் அதுதான், இன்று நாங்கள் எதுவுமே இல்லாதவர்களாக இருக்கிறோம்” என தொடர்ந்து கூறினார்.

போரில் அழிவுற்ற பொதுமக்களுக்கு எதுவித நினைவுச்சின்னமும் கிடையாது. கடைசி நாட்களில் நடைபெற்ற தீவிர மோதலில் போராளிகள் அல்லாத பொதுமக்கள் பெருமளவில் இறந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுத்து வருகிறது.

தமிழ் தலைவர்கள் இந்த அருங்காட்சியகம் அமைத்தது அரசாங்கத்தின் நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல் என்று கண்டனம் தெரிவிக்கின்றனர். பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, இது எந்த வழியிலும் இன நல்லிணக்கத்துக்கு உதவப் போவதில்லை என்று தெரிவித்தார். “வடக்கிலுள்ள ஒவ்வொரு தமிழ் குடும்பமும் குறைந்தது தங்கள் நேசத்துக்கும் நெருக்கத்துக்கும் உரிய சிலரையாவது இந்தப் போரில் பறிகொடுத்துள்ளார்கள். அவர்களது துக்கத்துக்கு ஒரு இடைவெளியும் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த யுத்த நினைவுச் சின்னம் யாழ்ப்பாண குடாநாடு உட்பட ஸ்ரீலங்காவின் வடபகுதி முழவதும் முற்றாக சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் தொடர்ந்து இருக்கப் போகிறது என்பதற்கான ஒரு நினைவூட்டல் ஆகும், அது இந்தப்பகுதியில் வாழும் போரினால் களைப்படைந்து போயுள்ள பெரும்பான்மையான மக்களிடம் ஒருவகையான சினத்தை கிளப்புவதற்கு ஆதாரமாக உள்ளது. 19 படைப் பிரிவுகளைக் கொண்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் 14 படைப் பிரிவுகள் வட மாகாணத்தில் தளம் அமைத்துள்ளன.

ஒவ்வொரு தமிழரிடத்திலும் இதே மாதிரியான கவலையே உள்ளது, வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் யாவும் இராணுவ குடியிருப்பகளாக மாறப்போகின்றது, வீரர்கள் தங்கள் குடும்பத்தினர்களை அங்கு கொண்டுவரப் போகிறார்கள், அத்தோடு தமிழ் பகுதிகள் யாவும் சிங்களமயமாகப் போகின்றன.

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு அல்லது தென்பகுதி நோக்கிச் செல்லும் ஏ - 9 நெடுஞ்சாலை போன்ற இடங்களில் இராணுவத்தினர் பிரசன்னமாக இருப்பதுபோல யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்கள் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால் அவர்கள் பிரசன்னத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்வதானால், பலாலி விமானத்தளத்தை சுற்றியுள்ள இடங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைப்பதற்காக 1990 ல் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர வேண்டியவர்களாக ஆனார்கள்.

இந்த மக்கள் என்றாவது தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையுடன் இன்னமும் அகதி முகாம்களில் வாடுகின்றார்கள். தாங்கள் தகரக் கொட்டகைக்குள் வாடி வதங்கும்போது, இராணுவத்தினர்கள் தங்கள் நிலங்களில் காய்கறிகளை பயிரிடுவதைக் கண்டு இவர்கள் மிகவும் கோபம் கொண்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத்; தளபதியான மேஜர்.ஜெனரல் ஹத்துருசிங்கா கூறுகையில், விமான நிலைய விரிவாக்கம் மற்றும் படை வீரர்களுக்கு குடியிருப்புகளை கட்டுவது போன்றவைகளுக்காக உயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகளில் சிறிதளவை இராணுவம் வைத்துக்கொண்டு மிகுதியை உரியவர்களிடம் ஒப்படைக்கும் என்றார். ஏற்கனவே இந்த உயர் பாதுகாப்பு வலயம் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டுவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.

“சீனர்கள் குடியருப்புகளைக் கட்டி வருகிறார்கள். 2012 டிசம்பர் அல்லது ஜனவரி 2013 அளவில் இது தயாராகிவிடும். அதன்பின் யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பகுதி வீடுகளை நாங்கள் கையளித்து விடுவோம்” என்றார் அவர்.

இத்தகைய கட்டுமானங்களை நிறுத்தும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான ஏ - 9 நெடுஞ்சாலை தார்க்கம்பளமிட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது, வழி நெடுக புத்த கோவில்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பாதையின் முக்கிய இடங்களில் விசேடமாக இராணுவ முகாம்களுக்கு அருகில் கடைகளையும் மற்றும் விடுதிகளையும் சிங்களவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் பிரதேசங்களில் எப்போதும் சிங்களவர்களும் மற்றும் முஸ்லிம்களும் இருந்து வந்துள்ளார்கள், மேலும் எந்த பிரதேசமும் ஒரு இனத்துக்கென்று முற்றாக பாதுகாக்கப் பட முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவிக்கிறது.

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் “ சமூகங்களின் குடிசனப்பரம்பல் விகிதம் என்பதைப் பற்றிப் பேசினால் அது இப்போது மாற்றமடைந்து வருகிறது - இதனால் குறிப்பிட்ட ஒரு சமூகம் மட்டும் பாதிக்கப்படவில்லை. இதனால் சிங்களவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் ஏனெனில் அவர்கள் அந்த இடத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். அதே போலத்தான் முஸ்லிம்களும். எனவே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன என்று ஒருவர் பேசும்போது, இது ஒரு சமூகத்துக்கு மட்டுமே முற்றாக இழைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை அவர் நினைவிற் கொள்ள வேண்டும்” என்று த ஹிந்து விடம் தெரிவித்தார்.

 -    நிருபமா சுப்பிரமணியம்  -  ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

(நன்றி : த ஹிந்து)

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல