கேரள மாநிலத்தில் விவசாயி ஒருவரின் கோழி ஒன்று தொப்புள் கொடியுடன் கூடிய குஞ்சு ஒன்றைப் பிரசவித்துள்ளது. காசர்கோடு மாவட்டம் செருவத்தூர் சீமேனி புலியன்னூரை சேர்ந்த ஏழை விவசாயி பரதன். கேரளாவில் ஏழைகளுக்கு குடும்ப ஸ்ரீ என்ற அமைப்பின் மூலம் இலவசமாக ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பரதனுக்கு வழங்கப்பட்ட ஒரு கோழி சில மாதங்களுக்கு முன் முட்டையிடத் தொடங்கியது. இது முட்டையிட்டாலும் அடை காப்பதில்லை. இந்நிலையில், நேற்று முன் தினம் பரதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது வெளியே மேய்ந்து கொண்டிருந்த கோழி, திடீரென வீட்டுக்குள் ஓடி வந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அது தொப்புள் கொடியுடன் ஒரு குஞ்சை பிரசவித்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பரதன், அந்த கோழிக்குஞ்சை ஒரு துணியில் சுற்றி பாதுகாப்பாக வைத்தார். கோழிக்குஞ்சு உயிருடன் உள்ளது. இலங்கையிலும் அண்மையில் இதுபோன்றதொரு நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக