அண்மைக்காலமாக சிறிலங்காவில் மர்மப் பொருளொன்று பெரும் பிரகாசத்துடன் தோன்றி அச்சுறுத்தி வருகிறது. குறித்த மர்ம பொருளை நாட்டின் பல பகுதிகளிலும் பார்வையிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருள் அதிக வெளிச்சத்துடன் காலை மற்றும் மாலை தோன்றி மறைவதாக நேரில் கண்டவர்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
சிலாபம், பண்டாரவள, பதுளை, அனுராதபுரம், நொச்சியாகம உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறான மர்மப் பொருட்கள் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பல பகுதிகளிலும் தென்படும் மர்மமப் பொருட்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இரணவில பிரதேசத்தின் இறால் பண்ணையொன்றுக்கு அருகாமையில் விமானம் ஒன்று தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
குறித்த மர்ம பொருள், அதிகாலை 4.00 மணியளவில் பிரகாசமான வெளிச்சத்துடன் தரையிறங்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று குறிப்பிட்டுடிருந்தது.
நொச்சியாகம பிரதேசத்தில் மிகப் பிரகாசமான பொருளொன்று வானிலிருந்து மரமொன்றில் இறங்கியதனைப் பார்த்ததாக பாடசாலை மாணவியொருவர் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று அதிகாலை அதிக வெளிச்சத்துடன் கூடிய பொருளொன்று மெதுவாக தரைக்கு வந்திறங்கியதாகக் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானமொன்று தீப்பற்றி எரிவதனைப் போன்று இந்த வெளிச்சம் காட்சியளித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அண்மையில் வானில் பிரகாசமான பொருளை பார்த்த பாடசாலை மாணவர்களின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக