திங்கள், 14 ஜனவரி, 2013

கேணல் சார்ள்ஸ்: வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே நடந்த எல்.ரீ.ரீ.ஈ யின் தாக்குதல்களுக்கு சூத்திரதாரியான புலி.

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

சண்முகநாதன் ரவிசங்கர் அல்லது கேணல் அருள்வேந்தன் என்கிற சார்ள்ஸின் ஐந்தாவது வருட மரண ஞாபகார்த்தம்

(தமிழீழ விடுதலைப் புலிகளின்( எல்.ரீ.ரீ.ஈ) அங்கத்தவரான, சண்முகநாதன் ரவிசங்கர் அல்லது கேணல் அருள்வேந்தன் என்கிற சார்ள்ஸ் 2008 ஜனவரி, 5ல் கொல்லப்பட்டார். 2008 ஜனவரியில் அவரது மரணம் நடைபெற்ற ஒரு வாரமளவில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவரது மரணத்தின் ஐந்தாவது நினைவு வருடத்தை குறிக்கும் வகையில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.)

ஜனவரி 5ல் மன்னாரில் வைத்து, சண்முகநாதன் ரவிசங்கர் அல்லது கேணல் அருள்வேந்தன் என்கிற சார்ள்சும் மற்ற மூவரும் கொல்லப்பட்டதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு( எல்.ரீ.ரீ.ஈ) பாரிய அடி விழுந்துள்ளது. மன்னார் - பூனரியான் பாதையில் அவர் பயணம் செய்த வெள்ளை ஹை ஏஸ் வான், இலுப்பக்கடவை மற்றும் பள்ளமடுவுக்கு இடையில் உள்ள ஒரு இடத்தில் வைத்து கண்ணிவெடித் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது நேரம் கிட்டத்தட்ட பி.ப 3.10 -15 மணி.

35 வயதான ரவிசங்கர் எல்.ரீ.ரீ.ஈயில் 1985ம் ஆண்டில், தனது ஆரம்பகால பதின்ம வயதுகளில் உள்ளபோதே இணைந்து விட்டார். இவரது அசல் இயக்கப் பெயர் சார்ள்ஸ் என்பதாகும். பல வருடங்களுக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ, பெயர்களை தூய தமிழாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கிய போது, அவரது பெயர் அருள்வேந்தன் என மாற்றம் பெற்றது. எப்படியாயினும் அநேகருக்கு அவர் சார்ள்ஸ் என்கிற பெயர் மூலமாகவே பல வருடங்களாக அறிமுகமாகியிருந்தார்.; அருள்வேந்தன் என்கிற சார்ள்ஸ் கொல்லப்படும்போது லெப்.கேணல் தர பதவியை வகித்து வந்தார். அவரது இறப்புக்கு பின்னர் அவர் கேணல் தரத்துக்கு பதவி உயர்வு பெற்றார்.

ரவிசங்கர் என்கிற சார்ள்ஸ் மரணமடையும்போது, எல்.ரீ.ரீ.ஈயில் மூன்று முக்கிய தலைமைப் பதவிகளை வகித்து வந்தார். அவர் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்ததுடன், சகல வெளியிட நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்தார், அத்தோடு, மன்னார் மாவட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட போர்ப்படை பிரிவின் தலைவராகவும் கடமையாற்றினார்.

சார்ள்ஸ், புலிகளின் அச்சமூட்டும் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மானின் பிரியத்துக்குரிய சீடராவார். அவர் பொட்டு அம்மானின் வசதியான உதவித் தலைவராக இருந்ததுடன், அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் அவரது வழிகாட்டியான பொட்டு அம்மானுக்கு சமமானவராகவும் மாறியிருந்தார். புலிகளின் உளவுத் தலைமையில் ஒருபோதும் நடந்திராத ஒரு விடயமாக, திறமைசாலியான சாள்ஸ், பொட்டு அம்மானை மாற்றீடு செய்யத்தக்க அளவில் தகுதியானவராகத் திகழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. சார்ள்ஸின் இழப்பு புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் மிகவும் ஆழ்ந்த வேதனையாக உணரப்பட்டிருக்கும்.

இதில் வஞ்சனையான விடயம் என்னவென்றால் யாழ் குடாநாட்டின்,வடமராட்சிப் பகுதியில் உள்ள புலோலியில் பிறந்து வளர்ந்த சார்ள்ஸை அவரது மரணத்தின் பின்னரே பெரும்பான்மையான தமிழ் மக்கள் அறிய நேர்ந்தது. நீண்டகாலமாக அவர் பல புனை பெயர்களைப் பயன்படுத்தி ஒரு இரகசிய செயற்பாட்டாளராக மறைவிலிருந்து பணியாற்றி வந்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈக்காக உளவு மூலம் பரபரப்பான சதியாலோசனைகள் புரிந்து நாடகீயமான பல வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், வெளிச்சத்துக்கு வருவதை தவிர்த்துக் கொண்டார்.

எல்.ரீ.ரீ.ஈயின் கடற்புலி தளபதி கேணல் சூசை பின்வருவாறு கூறியதன் மூலம், சார்ள்ஸ் அவர்களின் வாழ்க்கையை வெகு சுருக்கமாக சிறப்பான முறையில் கோடிட்டு காட்டியிருந்தார்,” “வெகு சிறிதளவான மக்களால் மட்டுமே அறியப்பட்ட ஒரு மனிதர் அவர், ஆனால் எப்படியாயினும் நமது எதிரிகள் அவரைப்பற்றி நன்கு அறிந்திருந்தார்கள்”. புதுக்குடியிருப்பில் நடந்த ஞாபகார்த்த கூட்டத்தில் பேசும்போது, சூசை, மிகவும் குறைவான சுயவிபரமுடைய சார்ள்ஸை தாக்குவதற்கு, மிகவும் உயர் நுட்பம் வாய்ந்த தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டதன் மூலம் அவர் இன்று முழு உலகினதும் கவனததை ஈர்த்துள்ளதை அவதானிக்க முடிகிறது எனத் தெரிவித்தார்.

சாள்ஸ் முழங்காவிலில் இருந்து பள்ளமடுவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் அவரது வாகனம் ஒரு நிலக்கண்ணி வெடியால் தாக்குதலுக்கு உள்ளானது. அரசாங்கத்தின் ஆழ ஊடுருவி தாக்கும் படையணியினர்தன் இதற்கு பொறுப்பு என எல்.ரீ.ரீ.ஈ குற்றம் சாட்டியருந்தது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் எல்.ரீ.ரீ.ஈயின் மூன்று உளவுத்துறை தலைமை லெப்ரினன்களும் கொல்லப்பட்டார்கள். ஜெயபுரத்தை சோந்த சுகந்தன் (சிவபாலன் ஸ்ரீதரன்), மல்லாவியை சேர்ந்த வீரமறவன் (பரராஜசிங்கம் சுதன்), மற்றும் வட்டக்கச்சியை சேர்ந்த கலை(சின்னத்தம்பி கங்காதரன்) ஆகியோர்களே அந்த மூவரும். சுகந்தன், சாள்ஸ் என்கிற அருள்வேந்தனின் தலைமை மெய்ப்பாதுகாவலரும் மற்றும் நெருங்கிய சகாவும் ஆவார்.

எல்.ரீ.ரீ.ஈ தனித்துவமான குண இயல்புகளைக் கொண்டதான உள்நாட்டில் வளர்ந்த ஒரு விடுதலை இயக்கம். இதன் மத்தியில் நடந்த நிகழ்வுகள், பிரதேசங்களைப் பற்றிய விரிவான அறிவு இல்;லாத யாழ்ப்பாண மண்ணின் மைந்தர்கள், வெகு எளிதாக உயர்மட்;ட கெரில்லாத் தலைவர்களாக மாற்றப்பட்டு,அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெளியே அனுப்பப்பட்டார்கள். சாள்ஸ் அவர்களும் அப்படியான ஒரு புலிதான், அவர் தனது அழிவு இலக்குகளை எண்ணற்ற மனித உயிர்களைப் பலி கொடுத்து நிறைவேற்றி வந்தார்.

பல வருடங்களாக அவர் எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வுப் பிரிவில் பொட்டு அம்மானின் நேரடிக் கட்டளையின் கீழ் பணியாற்றியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே, நடத்தப்படும் திறமையான வெளித்தாக்குதல்களுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டார். அப்படியான பகைமையான செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக, எதிரியின் நிலப்பரப்பில் ஆதரவு கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு விரிவான வலையமைப்பை அமைக்க வேண்டியிருந்தது.

அறிக்கைகளின்படி, அப்படியான களநிலமைகளை நிறுவுவதில் சாள்ஸ் முன்னோடியாகத் திகழ்ந்தார். உண்மையில் கொழும்புடனும் மற்றும் தெற்கின் ஏனைய பகுதிகளுடனும் அவருக்கு எதுவித முன் அனுபவமும் இல்லாதிருந்த போதிலும் தன்னுடைய பிற மேலதிக கடமைகளுக்கிடையில் அவர் அதனை திறமையாக செய்து வந்தார்.

2004ல் அவர் இராணுவ உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இது அனைத்து பாதுகாப்பு நிறுவல்கள் மற்றும் பாதுகாப்பு நபர்களின் இயக்கங்கள் யாவற்றையும் நெருக்கமாக கண்காணிப்பதுடன் தொடர்புடையதாக இருந்தது. உண்மையான செயல்பாட்டை திட்டமிடும் வகையில் அதற்கு முன்பு,குறித்த இலக்கு சம்பந்தமாக அதிக தகவல்கள் சேகரித்து, அனைத்தையும் ஒருங்கிணைத்து தாக்குதலை நடத்த வேண்டியிருந்தது.

தீவிர உளவுத் தகவல்களை மீள் நினைவு படுத்தவேண்டிய இந்த செயற்பாட்டை புலி வட்டாரங்கள் ‘றெக்கி’ என அழைத்து வந்தன. தகவல் கொடுப்போர்கள் மற்றும் இராணுவ தரத்தில் உள்ளோர் ஆகியோர்களிடமிருந்து இதற்காக தகவல்களை கொள்வனவு செய்யவேண்டியிருந்தது.

சமீப காலங்களில் சாள்சும் ஒரு விசேட படைப்பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பிரிவு இராணுவ உளவுத்துறையுடன் சம்பந்தப்பட்டதாகவும் மற்றும் மன்னார் வவுனியா மாவட்ட எல்லைப் பகுதிகளில் விசேட செயல்பாடுகளை நடத்துவதையும் இணைத்த ஒரு பணியாக இருந்தது. இந்தப் பிரிவு தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் நிலை கொண்டுள்ள இராணுவ நிலைகள்மீது தாக்குதல்களை தொடுக்கும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்து வந்தது. கொல்லப் படும்போது சாள்ஸ் இந்த வகையிலேயே பணியாற்றி வந்தார்.

சண்முகநாதன் ரவிசங்கர் பதின்மூன்று வயதில் ஒரு மாணவனாக இருந்தபோதே எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்து கொண்டார். எல்.ரீ.ரீ.ஈ யில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஏனைய புலிகளைப் போல அவரும் ஒரு சிறுவர் போராளிதான். எல்.ரீ.ரீ.ஈ யின் அப்போதைய யாழ்ப்பாண தளபதியாக இருந்தவர் கேணல் கிட்டு என்கிற சதாசிவம் கிருஸ்ணகுமார். வடமராட்சி பிரதேசத்தின் தலைவராக இருந்தவர் கடற்புலி தளபதியான கேணல் சூசை என்கிற தில்லையம்பலம் சிவனேசன்.

கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் நடுப்பகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பாதுகாப்பு படைகள், அப்போது சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ் போராளி இயக்கங்கள் அனைத்தினதும் கூட்டு முயற்சி காரணமாக முகாம்களில் உள்ளேயே கட்டுப்படுத்தி வைக்கப் பட்டிருந்தன. இதில் எல்.ரீ.ரீ.ஈ மிகவும் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்து வந்தது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் அநேக பகுதிகள் பாதி விடுதலை அடைந்ததை போல இருந்தன.

அப்போது வழக்கமாக என்ன நடந்தது என்றால் தமிழ் அமைப்புகள் பாதுகாப்பு படைகளின் முகாம்களுக்கு வெகு அருகில் காவலரண்களை அமைத்து நிலை கொண்டிருந்தன. எப்போதாவது துருப்புகள் முகாம்களை விட்டு வெளியே வருவதை காவலரண்களில் இருப்பவர்கள் கண்டுபிடித்ததும் முறையே அவர்களது தளங்களுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பி விடுவார்கள். உடனடியாக ஆயுதம் தாங்கிய கெரில்லாக்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடுவார்கள். பொதுவாக சிறு போராட்டத்தின் பின்னர் படையினர் முகாம்களுக்கு திரும்பிச் செல்வார்கள்.

இளையவனான ரவிசங்கர் 1985 டிசம்பரில் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்ததும்,தனது முதல் துப்பாக்கி வெடியின் ஞ}னஸ்தானத்தை பருத்திதுறை இராணுவ முகாமுக்கு அருகில்உள்ள காவலரணில் காவற்கடமையில் ஈடுபட்டவேளையிலேயே பெற்றுக்கொண்டார். அப்போது அவர் பகல்வேளைகளில் பாடசாலைக்கு சென்றபடி, இரவில் சில மணித்தியாலங்கள் காவற்கடமை புரிந்து ஒரு பகுதிநேர கெரில்லா போராளியாக இயங்கி வந்தார். அவரது சகதோழர்கள் தெரிவிப்பதன்படி, படிப்பில் மிகவும் கெட்டிக்கார மாணவனாக இருந்த அவர் தனது முறையான கல்வியை 1987ல் தனது 15 வது வயதில் கைவிட்டார். சிலகாலம் காவற் கடமைகளில் ஈடுபட்டதன் பின்னர்,ரவிசங்கர் என்கிற சாள்ஸ், எல்.ரீ.ரீ.ஈ நடத்தும் நியாய விலைக் கடை என்கிற சில்லறைக் கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் சாள்ஸ், உள்ளுர் இராணுவ பயிற்சியை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டார்.

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல