சனி, 19 ஜனவரி, 2013

Dryer - குறிப்புக்கள்

உடைகளைக் கழுவும், காயவைக்கும் இயந்திரத்தின் மூலம் நாம் விரையமாக்கும் சக்தியையும், பணத்தையும் கவனத்துடன் பார்த்தோமேயானால், பணத்தை மிச்சப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

உடைகளைக் கழுவும் இயந்திரம் உள்ள அறையை கோடை காலங்களில் பூட்டியும், குளிர் காலங்களில் அவ்வறையின் கதவைத் திறந்தும் வையுங்கள். கோடைகாலங்களில் அவ்வாறு அறைக் கதவை மூடிவைத்தால், dryer பாவிக்கும் போதுஏற்படும் வெப்பம் வீட்டின் முழுவதும் பாயாமல் தடுக்கலாம். அதையே குளிர்காலங்களில் அந்த அறைக்கதவைத் திறந்து வைப்பதன் மூலம், சிறிதளவு வெப்பம் குளிர்ந்த வீட்டை இன்னும் கொஞ்சம் வெப்பமாக வைத்திருக்கும்.

Dryerஐ ஒவ்வொரு முறை பாவிக்க முன்னாலும், அழுக்குச் சேரும் தட்டை
சுத்தப் படுத்துங்கள். அளவான காற்றோட்டம் இச்செய்கையால் dryerஇனுள்
பாயும்போது, சீக்கிரம் உடைகளைக்காயப் பண்ணுவதோடு, இயந்திரத்திற்
கும், உடைகளுக்கும் மிகவும் இன்றியமையாத ஒரு பாதுகாப்பு முறையுமாகும்.அதே நேரம் சக்தியையும் சேமிக்க முடியும்.

ஆடைகளை உலரவைக்கும்போது, போதுமான வெப்பத்தை இயந்திரம் தரும்.
ஆகவே cool-down சுழற்சியைப் பயன்படுத்தினால் நல்லது.

முற்பக்கமாக உடைகளைப் போடும் washerஐ வாங்குங்கள். மேற்பக்கமாக
உடைகளைப் போடும் றயளாநசகளை விட, இவை குறைவான நீரையே உங்கள்ஆடைகளில் கடைசியில் தேக்கும். இயந்திரத்திற்கும் கடுமையாக வேலை செய்ய வேண்டிய தேவையிருக்காது.

Dryerஇல் ஆடைகளைப் போடும்போது, கனத்த ஆடைகளை மெல்லிய ஆடை
களுடன் போட வேண்டாம். சம அளவிலான ஆடைத் தெரிவுகளையே ஒரு
நேரத்தில் போட்டால் ஒரே சமயத்தில் அனைத்தும் காய்வதுடன், சக்தியும்
அதிகமாக இழுக்காது.

ஓரு பழுவிற்கும் அதிகமான ஆடைகளை உலரப் போடும்போது, முதலில்
பருமன் குறைந்த, மெல்லிய ஆடைகளையே dryerஇல் போடுங்கள். அப்-
பொழுதுதான், பின்னர் பருமனான ஆடைகளைப் போடும்போது, இயந்திர
மானது, ஏற்கனவே நல்ல வெப்பத்தில் இருப்பதுடன், இவ்வாடைகளை மிகவும் சீக்கிரமாகக் காய வைக்கும்.

கொள்அளவிற்கும் அதிகமான ஆடைகளை dryerஇல் அமுக்கிப் போட
வேண்டாம். இவை துணிகள் சுழல இடம் கொடாததோடு, காயவும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். அல்லது முற்றாகக் காயாமலும் போகலாம்.

Dryerஇன் காற்றுப் போகும் வழியை அடிக்கடி சரிபார்த்து அதில் தூசிகள்
இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் காற்றுப் புக, வர முடியாத
பட்சத்தில், உங்கள் dryer சீக்கிரம் பாவனையின் உத்திரவாதத்தை இழந்துவிடும், பழுதாகிப் போகவும் வாய்ப்புள்ளது.

முடிந்தால், வீட்டினுள்ளேயே வைத்து ஆடைகளை உலர்த்தக் கூடிய ஒரு
rackஐ வைத்திருத்தல் நல்லது. rackஇல் எல்லா ஆடைகளையும் உலர்த்த
முடியாவிடினும், dryer பாவிக்கும் பட்சத்தில், இதிலும் போட்டு ஆடைகளை
உலர்த்தும் பட்சத்தில் கிட்டத்தட்ட 75சதவிகித சக்தியை நீங்கள் சேமித்துக்
கொண்டு தான் இருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

கழுவிய ஆடைகளை dryerஐப் பாவித்துக்காய வைக்காமல், உடைகளை உலர்த்தும் Lineஇல் அவைகளை வரிசைப்படுத்தி உலர வையுங்கள். ஒரு நாளைக்கு ஒருமுறை dryerஐ பாவிப்பது என்று கணக்குவைத்துக் கொண்டாலும், வருடத்தில் கிட்டத்தட்ட 150 டொலர்களை நீங்கள் நிச்சயம் சேமிக்கலாம்.

Electric Dryerஐ விட gas dryers கூடிய சக்தியையே வெளிக்கொணரும். நெடுங்-
கால உழைப்பின் தரத்தைக் கருத்தில் கொண்டு, சமையலறையிலிருந்து gas line ஒன்றை laundry room வரைகொண்டு வந்து dryer உடன் இணைத்துவிட்டால், சக்தி விரயமாவது தடுக்கப்படுவதோடு, நிறைய சேமிப்பையும் கையிருப்பில் கொண்டு வரலாம்.

பாரம் கூடிய jeans மற்றும் துவாலைகள் போன்றவற்றை ஒரு சுற்று கழுவி முடிந்தகையோடு, மற்றுமொருமுறை washerஇன் spin cycleஇல் போட்டு எடுங்கள்.பாரமான ஆடைகளில் நிச்சயம் தண்ணீர் தேங்கி நிற்கும். இப்படிச் செய்வதன்மூலம், தண்ணீர் மீண்டும் ஆடைகளிலிருந்து வெளியேற்றப் படுவதோடு,உலர வைக்கும் நேரத்தையும் மிகையாகமட்டுப் படுத்தும்.

உங்கள் ஆடைகளை தேவைக்கும் அதிகமாக உலர வைக்க வேண்டாம்.
உங்கள் dryerஇல் moisture censor அல்லது automatic dry cycle வசதிகள்
இருந்தால் கட்டாயம் அவற்றைப் பாவித்து உங்கள் ஆடைகளின் உலரும் நேரத்தைமட்டுப் படுத்துங்கள்.

பாரமான ஆடைகளை உலர வைக்கும்போது, இயந்திரத்தில் ஒரு உலர்ந்த,
சுத்தமான துவாலையையும் சேர்த்துக் காயவையுங்கள். உலர்ந்த துவாலையானது,அந்த ஆடைகளில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுப்பதால், உங்கள் ஆடைகளின் உலரும் நேரமானது, 25 சதவிகிதத்தால் குறைக்கப்படும்.

எப்பொழுதும் நிறைந்த ஆடைகளையே காயப் போடுங்கள். கொஞ்சமாக, இயந்-திரத்தில் அரைவாசிக்கும் மேலான இடம்விட்டு ஆடைகளைப் போடாதீர்கள்.
எக்கச்சக்கமான இடம் இருக்கும் இடத்தில் சுழலும் ஆடைகளால் நியாயமான
நேரத்தை உலருவதற்காகப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சரி, தேவையான அளவிற்குக் காயப் போடுவதற்கு ஆடைகள் இல்லையா? மீண்டும் உலர்ந்த சிலதுவாலைகளை அந்த ஆடைகளுடன் சேர்த்து dryerஇல் போடுங்கள். உங்கள் ஆடைகளை; உலரும் நேரத்தை இது கணிசமாகக் குறைக்கும்.

சரியான dryer settingஐப் பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். உயரிய வெப்பங்-
களால் தாக்கப்படும் நல்ல ஆடைகள் கெட்டுப் போக வாய்ப்புண்டு. ஆனால்
dryerஇல் உள்ள delicate/permanentபோன்ற சுழற்சிகளை ஆடை
களுக்கேற்றாற் போல் பயன்படுத்தும்போது, உங்கள் ஆடைகள் சேதங்களிலிருந்து பாதுகாக்கப் படுகின்றன. இம்மாதிரி மென்மையான ஆடைகளுக்கு உயரிய வெப்பம் தேவையுமில்லை. அந்த நேரங்களில் இவ்வகைச் சுழற்சித் தெரிவுகள் ஒரு நல்ல குறைந்த சக்தியைக் கொடுக்க உதவுகின்றன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல