பெங்களூர் மடிவாளா அருகே உள்ள கோடிசிக்கனஹள்ளியில் 4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொலை செய்த படுபாதகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மூன்று நாட்களுக்கு முன் கோடிசிக்கனஹள்ளி ரோட்டரி நகரைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு புதர் அருகே கிடந்தது. அந்தக் குழந்தை கற்பழிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடத்த 6 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தப் படையினர் 40 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் குற்றவாளி சிக்கினான்.
இந்த கொடூரனின் பெயர் மகேஷ் நஞ்சுண்டையா. 19 வயதான இவன் மண்டியாவைச் சேர்ந்தவன். கோடிசிக்கனஹள்ளியில் நண்பனோடு சேர்ந்து ஒரு அறையில் வசித்து வரும் இவன் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒரு ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறான்.
இவனது வீட்டுக்கு அருகே தான் அந்தச் சிறுமியின் அத்தையின் வீடு உள்ளது. சிறுமியின் தாயார் வேலைக்குப் போய்விட்ட நிலையில், அவள் மாலையில் தனது அத்தையின் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது சாக்லேட் தருவதாகக் கூறி அந்தக் குழந்தையை தனது வீட்டுக்குள் இழுத்துச் சென்ற மகேஷ் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். அப்போது அந்தக் குழந்தை வலியால் கதறவே அவளது கழுத்தை நெரித்துள்ளான், இதில் அவளது ஒரு கண்ணே வெளியே பிதுங்கிவிட்டது.
சில நொடிகளில் மரணமடைந்துவிட்ட அந்தச் சிறுமியின் உடலை இரவில் வீட்டுக்கு அருகே உள்ள புதரில் வீசியுள்ளான். இரவு முழுவதும் குழந்தையைக் காணாமல் தேடிய தாயாரும் அக்கம் பக்கத்தினரும் போலீசிலும் புகார் கொடுத்தனர்.
இந் நிலையில் மறுநாள் காலை அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் கொண்டு வந்த மோப்ப நாய் புதரில் இருந்து மகேஷ் தங்கியுள்ள வீடு உள்ள பகுதியை நோக்கி ஓடியது.
இதையடுத்து அக்கம்பக்கத்தைச் சேர்ந்த யாரோ தான் இந்த ஈனச் செயலை செய்திருக்க வேண்டும் என்று கருதிய போலீசார், 6 தனிப்படைகளை அமைத்து அப் பகுதி வாலிபர்கள், ரவுடிகள், ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.
80 பேர் மீது சந்தேகம் வரவே அவர்களை பல்வேறு காவல் நிலையங்களுக்கும் அள்ளிச் சென்று 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் கடுமையான அடி, உதை கொடுத்து விசாரித்ததில், 3 பேர் மீது சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து இந்த மூன்று பேரையும் மடிவாளா, பரப்பன அக்ரஹாரா, ஆடுகோடு காவல் நிலையங்களுக்கு தனித்தனியே பிரித்து கொண்டு சென்ற போலீசார் அவர்களை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்ததில் மகேஷ் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று தகவல் தந்தனர். தங்களையும் சிறுவர், சிறுமியரிடம் அத்துமீற பலமுறை மகேஷ் அழைத்துள்ளதாகவும் இவர்கள் கூறினர்.
பிடிபட்ட 80 பேரில் மகேஷ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமியின் உடலை நள்ளிரவில் புதரில் வீசிவிட்டு மறுநாள் வழக்கம் போல் வேலைக்குப் போய்விட்டான் இவன்.
இதையடுத்து மகேஷை அவன் வேலை பார்த்த ஜவுளி ஆலையில் வைத்து பிடித்த போலீசார் அவனை பந்தாடியதில் உண்மையை ஒப்புக் கொண்டான்.
இவனிடம் விசாரித்ததில் ஏற்கனவே சில சிறுவர்களிடமும் இவன் செக்ஸ் அத்துமீறிலில் ஈடுபட்டதும், வழக்கமாகவே வேலைக்குப் போய் வந்தவுடனேயே சிறுவர், சிறுமியர்களிடம் அத்துமீறி வந்ததும் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக