“என் மகள் தைரியமான இதயம் கொண்டவள், அவள் ஒட்டுமொத்த நாட்டையே விழித்தெழச் செய்தாள். அவரது சாவுக்கு காரணமான 6 பேரும் சாக வேண்டும்” என்று டெல்லியில் பலியான மாணவியின் தந்தை ஆவேசமாகக் கூறினார்.
டெல்லியில் ஆர்.கே.புரத்தில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்கு, பாலியல் வன்கொடுமைக்கு பலியான மருத்துவ மாணவியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெற்கு டெல்லி மேயர் சவிதா குப்தா இதனை அறிவித்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு பலியானவரின் பெயரை வெளியிடுவது தண்டனைக்குரியது என்று குற்றவியல் சட்டம் சொல்கிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தால் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெயர் வெளியிடலாம்.
அந்த வகையில், மாணவியின் பெயரை அருங்காட்சியகத்திற்கு வைப்பதற்கு அவரது தந்தை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதால் இதில் சட்டச்சிக்கல் இல்லை என்று மேயர் குப்தா தெரிவித்தார்.
அப்போது மாணவியின் தந்தை பேசும்போது, ‘என் மகளை பாலியல் வன்கொடுமைக்கு பலியான மாணவி என்று கூறுவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அவள் பெயர் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைக்கிறோம். தைரியமான இதயம் கொண்ட அவள், ஒட்டுமொத்த நாட்டையே விழித்தெழச் செய்தாள். அவரது சாவுக்கு காரணமான 6 பேரும் சாக வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.
இதேபோல் மாணவியின் சகோதரர் கூறுகையில், ‘நீதிபதி வர்மா குழு பரிந்துரைகளை அமல்படுத்துகிறார்களா இல்லையா? என்பதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், எனது சகோதரி சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
6-வது குற்றவாளி சிறுவன் என்பதால் அவனை விட்டுவிடாமல் அவனையும் மற்ற குற்றவாளிகளைப் போன்று நடத்த வேண்டும். 14 வயதைக் கடந்தாலே அவனுக்கு எது சரி, எது தவறு? என்று தெரியும். எனவே, அவனை விடுதலை செய்யக்கூடாது’ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக