புளியம்பட்டி முகாமிலிருந்து, குழந்தையுடன் வேலைக்கு சென்று, மாயமான இலங்கை பெண் அகதியை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல், கீரனூர் அருகே புளியம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் மலர், 47. இவரது மகள் ஜெயமேரி, 21, மதுரை முகாமில் வசிக்கும், தனது பெரியம்மாவை பார்க்க, ஜெயமேரி அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது, மன்னார்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொண்டு, திருச்சியில் வசித்தனர்.
சில மாதங்களுக்கு பின்பு, கணவரடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கர்ப்பிணியான ஜெயமேரி, புளியம்பட்டி முகாமிற்கு வந்து, தாய்வீட்டில் தங்கியிருந்தார். அங்கு குழந்தை பிறந்தது.
அதன் பின்பு, முகாமிற்கு வந்த சுரேஷ், மீண்டும் சேர்ந்து வாழ விரும்பி, பழநி வீரகாளியம்மன் கோயில் அருகில் வாடகைவீடு பார்த்து மனைவியை அழைத்து சென்றார். சில நாட்களில் மீண்டும் குடும்ப தகராறு ஏற்படவே, புளியம்பட்டி முகாமிற்கு வந்த ஜெயமேரி, தாய் மலருடன் தங்கினார்.
அங்கிருந்து வேலை தேடி குழந்தையுடன் வெளியே சென்ற ஜெயமேரி மாயமானார். அவரது கணவர் சுரேஷ், வேறு ஒரு குற்றத்திற்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2 மாத கைக்குழந்தையுடன் மாயமான மேரியை கீரனூர் போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக