ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

குட் டச், பாட் டச்

"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு"

குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் பற்றி ..முக்கிய விஷயங்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகள் ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது.

1.குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்..லிங்க் கொடுத்து இருக்கிறேன்..குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்...

2.உடல் எனபது தனிப்பட்டவரின் உடமை..அதில் அத்து மீற யாருக்கும் உரிமை இல்லை.தாய்,தந்தை கூட சில வயது வரைதான்.

3.எந்த உறுப்பையும் அதன் பெயர் சொல்லி விளக்க வேண்டும்.

4.உள்ளாடை அணியும் பகுதிகள் யாராலும் தொடப்பட்ட கூடாது.அங்கு யாரவது கை வைத்தால் உடனே “No “சொல்ல கற்று கொடுக்கவேண்டும்.உடனே உதவிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும்.

5.நம்பிக்கையான நபர்கள் என்று தாய் அல்லது தந்தை இல்லை குடும்பத்தில் நெருக்கமானவர்களை கூறி அவர்களிடம் உடனே விஷயத்தை கூற சொல்லி கொடுக்க வேண்டும்.

6.நம்பிக்கையான நபர் குடும்பத்தின் வெளியிலும் ஒருவர் இருக்க வேண்டும்.சில விஷயங்களை குழந்தைகள் குடும்பத்தில் சொல்ல தயக்கப்படும்..அல்லது வெளியில் நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்லலாம்.அவர் பள்ளி ஆசிரியை அல்லது நெருக்கமான நண்பர் என்று இருக்கலாம்..

7.குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் (pedophile ) குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்கமுடியாதபடி செயல்படுவார்கள்.பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள்,அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,வேலை செய்பவர்கள்….எனவே குழந்தைக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.

8.முதலில் குழந்தைக்கு பரிசுகள் வாங்கி தன் வசப்படுத்த முயற்சிப்பார்கள்.எனவே குழந்தைக்கு பரிசு வாங்கி கொடுபவர்கள் எல்லாம் மிக அனபுடையவர்கள் என்று நாம் போதிக்க கூடாது.அது ஆழமாக தவறான புரிதலாக மாறும்.

9.குழந்தையை யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ,கட்டி பிடிக்க சொல்லியோ வற்புறுத்த கூடாது.அது சரி என்று வாதம் செய்ய கூடாது.மாமா எத்தனை ஆசையா இருக்கார்..போய் முத்தம் கொடு என்று கூறக்கூடாது.

10.அவர்களுக்கு ரகசியத்தை எப்படி வெளிபடுத்த வேண்டும் ..யாரிடம் சொல்லவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.
Good touch (kirthika)
11.டிரைவர் போன்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது மடியில் குழந்தைகளை வைத்து கொண்டு வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.

12.யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து கூறும் இனிமையான சூழல் வீட்டில் இருக்கவேண்டும்.பயம் இருக்க கூடாது.நேருக்கு நேர் பேச..மனதை திறந்து பேசும் சூழல் வேண்டும்.

13.தனது உடலில் அத்துமீற யாருக்கும் உரிமை இல்லை என்று தெரியவும்,அப்படி யாரவது செய்தால் எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.

14.அவர்கள் குழந்தைகளை மிரட்டுவார்கள்..அம்மா ,அப்பாவை கொன்றுவிடுவேன்..உன் தவறுகளை சொல்லிவிடுவேன் என்று…யார் மிரட்டினாலும் உண்மைகளை கூற இன்னொரு நம்பிக்கையான நபர் ஒருவர் குடும்பத்தை தவிர தேவை.

15.குழந்தைகள் இதை போன்ற விஷயங்களை கூறினால் உடனே கோபப்படுவதோ இல்லை அழுவதோ கூடாது.அம்மாவை வருத்தப்படுவார்கள் என்று விஷயங்களை மறைக்க முயற்சி செய்யலாம்.

16.நான் கொடுத்த படத்தில் வெள்ளை பகுதிகள் பாதுகாப்பு பகுதியாகவும்..மஞ்சள் பகுதிகள் அடுத்த வகையுலும் சிவப்பு பகுதிகள் யாராலும் தொடக்கூடாத பகுதிகளாக படத்தை காட்டி விளக்கினால் எளிதாக புரியும்.

17.ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்கவேண்டும்.அதே சமயம் மிக சிறிய குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் மறந்து விடுவார்கள்.

18.இந்த வீடியோ உங்கள் பள்ளியுள்ளும்,வீட்டிலும் போட்டு காட்டலாம்.ஷேர் செய்யலாம்.http://www.youtube.com/watch?v=yA_Oe5JWf4k

19.குறிப்பிட்ட இந்த லிங்க்கை படித்து கற்பிக்கலாம் .ஆழ்ந்து படிக்கவும். http://www.underwearrule.org/howto_en.asp.
http://www.underwearrule.org/source/text_en.pdf

20.குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு நம்மை சேர்ந்தது என்று ஒவ்வொரு பெற்றோரும்,மற்றோரும் உணர வேண்டும்.அந்த பொறுப்புடன் நடந்து கற்பிக்க வேண்டும்

21.பாதுகாப்பு குழந்தைகளின் உரிமை அதை முதலில் சொல்லி கொடுக்க வேண்டும்.

22.அனைவருக்கும் ஒரு உணர்வு இருக்கும்,மகிழ்ச்சி,சந்தோசம் ,சோகம் எனபது போல ..சில விஷயங்கள் சங்கடமாக இருக்கும்.அதை வெளியில் நம்பிக்கையானவரிடம் கூற வேண்டும்.சங்கடங்களை நம்மிடம் வெளிபடுத்த சந்தர்பங்கள் அளிக்க வேண்டும்.

23.தனிமையான இடத்திற்கு யார் கூப்பிடாலும் போகாமல் இருக்க அறிவுறுத்தவேண்டும்.

24.எது நல்ல தொடுகை ..அரவணைப்பு ,குடுமபதினர் முத்தம் கொடுப்பது போன்றவை .அதுவும் பாதுகாப்பான இடங்களில் மட்டும்.பாதுகாப்பான இடங்கள் எது என்பதை உள்ளாடை விதிகள் மூலம் சொல்லலாம்.

25.டாக்டர்கள்,பெற்றோர்கள் போன்றவர்கள் காரணத்தோடு தொடுவது நல்ல தொடுகை.
சுத்தம் செய்யவோ அல்லது மருத்துவ உதவி செய்வதும் நல்ல தொடுகை.

26.எது கெட்ட தொடுகை.
யாராவது தொட்டால் சங்கடமாக உணர்வது,
உள்ளாடை பகுதிகளை தொடுவது..
நீண்ட நேரம் கிச்சு,கிச்சு மூட்டுவது ,
வலிகளை ஏற்படுத்துவது ..
மூச்சு திணறும் போன்ற உணர்வுகள் போன்றவை
கெட்ட தொடுகை.இதை கூறுவது மூலம் சிறுவர்கள் மனதில் வித்தியாசத்தை அறிய சொல்லி கொடுக்கலாம்.

27.பேட் டச் ஏற்பட்டால் அது யாருடைய தவறு ? குழ்ந்தையுடையது அல்ல அது தவறு செய்பவருடையது .இதை தெளிவாக கூற வேண்டும்.

28.தவறு செய்தவர்களை காட்டி கொடுக்க வேண்டுமே தவிர பயப்படகூடாது.அவர்களை பற்றி உடனடியாக நம்பிக்கை ஆனவர்களிடம் கூற வேண்டும்.

29.நோ ,இல்லை ,முடியாது என்ற வார்த்தைகளை குழந்தைகள் அழுத்தம்,திருத்தமாக கூற பழக்க படுத்தவேண்டும்.

30.புத்தகங்கள்,கதைகள்,விடியோக்கள் ,பவர் பாய்ன்ட் ஸ்லைட்கள் மூலமாக அவ்வப்பொழுது வயதுக்கு ஏற்ப சொல்லி கொடுக்க வேண்டும்.

31.அவர்களுக்கு சிலரிடம் அன்பாக இருக்க பிடிக்கவில்லை என்றால் வலியுறுத்த கூடாது.அன்பை திணிக்க கூடாது.

32.அவர்கள் உடலின் மேலான ஆளுமையை அவர்களிடம் விடவேண்டும்.அவர்களுக்கு சிலரை அரவணைக்கவோ ,கைகொடுக்கவோ ,பக்கத்தில் அமரவோ பிடிக்கவில்லை என்றால் வற்புறுத்த கூடாது.அப்படி செய்தால் உள்ளுணர்வு பாதிக்கப்படும்.

33.அன்பாகவும்,எளிதாக அவர்களுக்கு புரியும் வகையில் பேசி எடுத்துகூறவேண்டும்.அவர்கள் கூறுவதை கோபபடாமல் காது கொடுத்து கேட்க்க வேண்டும்.

34.மகிழ்ச்சியாக உணரும் தருணங்களையும் ,சங்கடமாக உணரும் தருணங்களையும் உணர வைத்து நல்ல,கெட்ட தொடுகைகளை விளக்கலாம் .
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல