வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

விஷ்வரூபம்: ஒரு நடுநிலைப் பார்வை

அண்மையில் அதிக கவனம் பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை ‘வூட்லன்ட’; திரையரங்கில் முதல் நாளன்றே பார்க்க முடிந்தது. பெரும் விமர்சனத்திற்குள்ளான இத் திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்களை பெறுவது குதிரைக் கொம்பாகவே இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் வரவேற்பை கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் வழங்கியிருந்தமைக்கு இத்திரைப்படம் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளும் அரசியல் ஊடுறுவல்களுமே காரணம் எனலாம். இதற்காக முஸ்லிம் அமைப்புகளுக்கும், ஜெயலலிதாவிற்கும் கமல் ரசிகர்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் இலங்கையில் ‘கொண்கோட்’ அரங்கில் இரண்டாவது முறையாகப் பார்த்தேன். இந்தியத் திரையரங்கில் திரைப்படத்தின் வசனங்களைவிட ரசிகர்களின் கூச்சல் சப்தமே மேலோங்கியிருந்தமையால் இரண்டாவது முறை பார்க்க வேண்டியதாயிற்று (சும்மா கத விடாத. படம் புரியாமத்தானே ரெண்டாவது முறை பார்த்தே).

இரு நாட்டு திரையரங்கிலும் பார்த்தபடியால் சர்ச்சைக்குரிய காட்சிகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டதையும் உணர முடிந்தது. 7 காட்சிகள் நீக்கப் படுகின்றன என்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் தமிழகத் திரையரங்குகளில் சில அரபு மற்றும் தமிழ் வசனங்கள் மட்டுமே நீக்கப்பட்டிருந்தன. இலங்கைத் திரையரங்கில் அவை கூட நீக்கப்படாமலே இருந்தன.

அமெரிக்கக் கைதியின் கழுத்து அறுப்புக் காட்சியில் ஓரிரு பிரேம்கள் மேலதிகமாக இலங்கைத் திரையரங்குகளில் வெட்டப்பட்டிருந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் காட்சிகளோ, ஒலியோ நீக்கப்பட்டதனால் படத்தின் வீரியத்திலோ, படம் ஏற்படுத்தும் பாதிப்பிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் நிஜம். குறிப்பாக தலிபான் தீவிரவாதி உமர் கோவையிலும், மதுரையிலும் பதுங்கியிருந்ததாக சொல்லப்படும் வசனமும், குர்ஆன் வசனங்களும், நாசர் அரபு மொழியில் கூறும் ‘அரேபியர் அல்லாதவர்களை வெளியேற்ற வேண்டும’ என்ற வசனமும் தமிழகத் திரையரங்கில் நீக்கப்பட்டிருந்த போதும், அக்குறித்த வசனங்கள் ஏற்கனவே திரைப்பட எதிர்ப்பாளர்களாலும், விமர்சகர்களாலும் இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதனால் அக்காட்சியின் போது ரசிகர்கள் அனைவரும் இந்தக் காட்சியில் இன்ன வசனம்தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொண்டார்கள்.

பலரும் அக்காட்சிகளின் போது தமக்குள்ளும், நண்பர்களுக்குள்ளும் அவ்வசனங்களை சொல்லிக்காட்டினார்கள். ஆக இத்திரைப்படத்தின் எதிர்ப்பின் காரணமாக நீக்கப்படுவதாக 24 கூட்டமைப்பினால் அறிவிக்கப்பட்ட 7 காட்சிகளும், வசனங்களும்தான் விஸ்வரூபம் திரைப்படத்தில் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்ட விடயங்களாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். திரைப்படத்தின் ஏனைய காட்சிகளோ, திரைப்படமோ புரியவில்லை என்று விமர்சிக்கும் எல்லோருக்கும் நீக்கப்பட்ட காட்சிகளும், வசனங்களும் மட்டும் உறுதியாக விளங்கிக்கொள்ள முடிந்ததும், பலராலும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்படமாகியதும், திரையரங்குக்கே செல்லாத முஸ்லிம், தமிழ் மக்களனைவரையும் திரைப்படம் நோக்கி நகர்த்தியதும்தான் இத்திரைப்படத்திற்கு உண்டான எதிர்ப்பினால் ஏற்பட்ட விளைவுகளாகும். ஆக முஸ்லிம்களின் 24 கூட்டமைப்பினர் மிக முக்கியமான விளம்பரப் புரட்சியை இத்திரைப்படத்தின் மூலம் புரிந்துள்ளதோடு கமல்ஹாசனின் சொத்துக்கள் அனைத்தும் அவரிடமே திரும்பக் கிடைப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல