பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பதவியேற்ற பின் 7 மாதங்களில் 7 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள சட்ட வல்லுநர் குழு, கருணை மனுவை நிராகரிப்பு செய்வது ஜனாதிபதி மட்டும் முடிவு செய்வது இல்லை என தெரிவித்துள்ளனர்.
சட்ட வரைவு 72 ன் படி கருணை மனுக்கள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது அவரது தனிப்பட்ட முடிவாக இல்லாமல் கூட்டு முடிவாக மட்டுமே இருக்கும். கருணை மனுக்கள் குறித்து முடிவு செய்ய மத்திய அமைச்சர்கள் கவுன்சில், ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படியே சட்ட விதிமுறைகளின்படி மரண தண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிறார் .
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் கருணை மனுவை ஏற்று மன்னிப்பு வழங்குவது அல்லது தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது அல்லது நிரந்தரமாக நிறுத்துவது அல்லது மனுவை நிராகரிப்பது அல்லது மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனை வழங்குவது என்பவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
மேலும் 53வது சாசனத்தின்படி மத்திய நிர்வாகத்தின் அதிகாரத்தை நேரடியாகவோ அல்லது சட்ட பிரிவுகளின்படி அதிகாரிகளை கொண்டோ நிறைவேற்றும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டமன்ற தற்காலிகமாக செயல்படாமல் இருக்கும் போது மட்டுமே அவரது அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.
74 வது சாசனத்தின்படி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பெயரிலேயே செயலாற்ற வேண்டும். மேலும் அமைச்சர்கள் குழு, ஜனாதிபதிக்கு அளிக்கும் எந்த ஒரு ஆலோசனைக்கு எதிராகவும் எந்த ஒரு கோர்ட்டும் விசாரிக்க முடியாது.
சங்கர் தயாள் ஷர்மா தனது பதவி காலத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட 14 கருணை மனுக்களையும் நிராகரித்துள்ளார். கே.ஆர்.நாராயணன், ஒரே ஒரு கருணை மனுவிற்கு மரண தண்டனைக்கு பதிலாக மாற்று தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார். அப்துல் கலாம், ஒரு கருணை மனுவை நிராகரித்தும், மற்றொன்றை வேறு தண்டனை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கலாம் தனது பதவி காலம் முடியும் போது 25 கருணை மனுக்களை நிலுவையில் வைத்துள்ளார். பிரதீபா பாட்டீல் தனது பதவி காலம் முடியும் போது 34 பேருக்கு மன்னிப்பு வழங்கி உள்ளார். 3 மனுக்களை இவர் நிராகரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக