குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அத்தகைய நேரத்தில் வரும் வலிக்கு அளவே இருக்காது. அது பெண்களுக்கு ஒரு மறுஜென்மம் என்று சொல்வார்கள். அத்தகைய மறுஜென்மமாக நினைக்கும் பிரசவம் சாதாரணமாக இருப்பதை தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு பிரசவமானது விரைவிலேயே ஏற்படும். அத்தகைய பிரசவத்தையே குறைப்பிரசவம் என்று சொல்வார்கள். இதற்கு காரணம் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் உடலில் போதிய சத்துக்கள் இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி, அவர்களது ஒருசில செயல்களாலும் குறைப்பிரசவம் ஏற்படுகிறது.
இத்தகைய பிரசவம் நடைபெற்றால், பிறக்கும் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து சில நாட்கள் பராமரிக்க வேண்டும். மேலும் இத்தகைய குழந்தைகளை கவனமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில் சாதாரணமாக குழந்தைகள், வெளியே வருவதற்கு 38-40 வாரங்கள் ஆகும். அந்த நேரத்தில் தான் குழந்தைகள் முழு வளர்ச்சியை பெற்றிருக்கும். ஆனால் அத்தகைய முழு வளர்ச்சி குழந்தைகளுக்கு இல்லாத பட்சத்தில், குழந்தைகள் மிகவும் சோர்வுடன், சரியான எடை இல்லாமல் இருப்பார்கள். எனவே இந்த மாதிரியான குறைப்பிரசவம் நடைபெறாமலிக்க, கர்ப்பமாக இருக்கும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
குறைப்பிரசவத்தை தடுக்கும் 9 வழிகள்!!!
கர்ப்பகால வைட்டமின்கள்
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின் மாத்திரைகளான கால்சியம், வைட்டமின் கே, ஃபோலிக் ஆசிட் போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் குறைப்பிரசவம் நடைபெறும்.
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
போதிய ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உடலில் இருந்தால், கருப்பை குழாய்களில் இரத்தம் உறையாமல் தடுக்கலாம்.
ஈறு நோய்கள்
கர்ப்பமாக இருக்கும் போது பல் ஈறுகளில் நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே பற்கள் தான் என்று அலட்சியமாக நினைக்காமல், சரியாக பராமரித்து வர வேண்டும். ஏனென்றால், இதனால் கூட குறைப்பிரசவம் ஏற்படும்.
தண்ணீர்
கர்ப்ப காலத்தில் நிறைய தண்ணீர் தாகம் இருக்கும். எனவே அப்போது அடிக்கடி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சோம்பேறித்தனமாக உள்ளது என்று விட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டு, இறுதியில் குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
சிறுநீர் கழித்தல்
கர்ப்பத்தின் கடைசி மாதத்தில் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும். எனவே அப்போது அதனை அடக்கி வைக்காமல், போய்விட வேண்டும்.
அடிக்கடி உண்ணுதல்
சரியான உணவுகளை மட்டும் சாப்பிட்டால் போதும் என்று நினைக்க வேண்டாம். சரியான நேரத்தில் சரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவ்வப்போது சிறிதாக சாப்பிட்டாலும் நல்லது.
சரியான உணவுகள்
பழங்களை சாப்பிடும் போது கர்ப்பத்திற்கு ஆபத்தை விளைக்கும் பழங்களான பப்பாளி மற்றும் அன்னாசியை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் இதில் உள்ள கெமிக்கல் கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் ஒருவித தடையை உண்டாக்கி, குறைப்பிரசவத்தை ஏற்படுத்திவிடும்.
அதிகமான எடை தூக்குதல்
அளவுக்கு அதிகமான எடையை கர்ப்பத்தின் ஆரம்பத்தில் தூக்கினால், கருச்சிதைவு ஏற்படும். அதுவே இறுதியில் தூக்கினால், குறைப்பிரசவம் ஏற்படும். எனவே இத்தகைய செயலை தவிர்ப்பது நல்லது.
அதிக உடல் எடை
எப்படி அதிக எடை உள்ள பொருளைத் தூக்கினால், குறைப்பிரசவம் நடைபெறுதேமா, அதேப் போல், உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைப்பிரசவம் நடைபெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே எடையில் கவனமாக இருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக