வியாழன், 14 மார்ச், 2013

புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் தங்களை மனித உரிமைக் காவலர்களைப்போல் காட்டிக்கொள்கிறார்கள். (3)

பகுதி - 3

பல படித்த மற்றும் உயர் கல்வி மற்றும் தொழில் திறமைமிக்க புலி ஆதரவாளர்கள், இரவோடு இரவாக உருமாற்றம் பெற்றிருப்பது மிகவும் வேடிக்கையானது கூட. எல்.ரீ.ரீ.ஈ யின் ஒவ்வொரு செயற்பாட்டையும், மாற்றுக் கருத்துடையவர்களை கொலை செய்ததை கூட, நியாயப்படுத்திய இந்த நபர்கள், இப்போது மனித உரிமையின் காவலர்களாக மாறியுள்ளார்கள். அவர்கள் வெட்கமின்றி கௌரவமான மனித உரிமை அமைப்புகளான, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை என்பனவற்றுடன் இணைந்துள்ளார்கள்.

கவனம்

LTTE-Diasporaஇந்த மாற்றத்தோடு முழுக் கவனமும் மாற்றியமைக்கப்பட்டது. நாதியற்ற பொதுமக்களுக்காக வடித்த முதலைக் கண்ணீர் வற்றிப் போனது. ஆhப்பாட்டக்காரர்களும் மற்றும் எதிர்ப்பாளர்களும் வித்தியாசமான இராகத்தில் பாட்டிசைக்க ஆரம்பித்தார்கள். அப்பாவிப் பொதுமக்களுக்காக ஒப்பாரி வைப்பதற்குப் பதிலாக, எல்.ரீ.ரீ.ஈயின் மீதான தடையை நீக்கி. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக முறைப்படி அதனை அங்கீகரிக்கும்படி , மேற்கு நாடுகளிடம் அவர்கள் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தார்கள்.

வதைபடும் மக்களை காட்சிப்படுத்திய சித்திரங்கள் மற்றும் சர்வதேச தலையீடுகளை கோரிய பதாகைகள், அகற்றப்பட்டு எல்.ரீ.ரீ.ஈக்கு ஆதரவான பதாகைகள் வைக்கப்பட்டன. பிரபாகரனின் சித்திரத்தை கொண்ட பதாகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு எங்கள் தலைவர் பிரபாகரன் எனும் கோசங்கள் எழுப்பப்பட்டன. எல்.ரீ.ரீ.ஈ தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று மக்கள் கோசங்கள் முழங்குவதற்கிடையில் புலிக்கொடிகள் பெருமையுடன் பறக்கவிடப்பட்டன. அந்தக் கொடியில் ஒப்பனையுடன் கூடிய ஒரு மாற்றம் இடம்பெற்றிருந்தது. சிலவற்றில் கீழே காணப்படும் இரண்டு துப்பாக்கிகளும் காணாமல் போயிருந்தன. பேச்சளவில் வளவளப்பான ஒரு விளக்கம் அதற்கு கூறப்பட்டது, சுடுகலன்கள் இல்லாது உறுமும் புலியின் படம் மட்டும் உள்ள கொடிதான் தமிழ் தேசியக் கொடி என்பதுதான் அந்த விளக்கம். எல்.ரீ.ரீ.ஈயின் உத்தியோகபூர்வ கொடியில் அதுவரை துப்பாக்கிகளின் படம் இருந்து வந்தது. ஒரு துரிதமான நடவடிக்கையூடாக எல்.ரீ.ரீ.ஈ தனது உண்மையான நிறத்தை வெளிக்காட்டியது.

புலம்பெயர்ந்தவர்களின் ஆர்ப்பாட்டங்கள், இப்போது புலிகளின் விடயங்களுக்காகத்தான் மேற்கொள்ளப்படுகிறது என்று வெளிப்படையாகவே அடையாளம் காணப்பட்டது. பாவப்பட்ட பொதுமக்கள் கைவிடப்பட்டவர்களானார்கள். மக்களின் நிலமையில் கவனம் செலுத்தி முன்னர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டபோது, மெதுவான ஆனால் படிப்படியாக, தமிழ் மக்களின் துயரமான நிலைக்காக மேற்கிலுள்ள அரசாங்கங்கள், பொதுமக்கள், மற்றும் ஊடகங்கள் காட்டும் அனுதாபம் வளர்ச்சி பெற்று வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன, இதற்கான ஒரு முக்கிய காரணம் புலிகளின் முத்திரைகளும் மற்றும் சின்னங்களும் பகிரங்க ஆர்ப்பாட்டத்தில் இடம் பெறாமையே ஆகும். அந்தப் பிரச்சினை ஒரு மனிதாபிமான விடயம் என்கிற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதால் சாத்தியமான மனமாற்றம் இடம்பெற்றிருக்கக்கூடும்.

தமிழ் புலம்பெயர்ந்தவர்களால் அதன் முன்னைய பாத்திரத்தில் பின்பற்றப்பட்டது பொதுமக்களின் நிலையை மட்டுமே எடுத்துக்காட்டும் தர்க்க ரீதியான மற்றும் மனிதாபிமான காரணங்கள் மட்டுமே. பொதுமக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதுக்கு நேரம் எடுக்கும். முடிவானதாக இல்லாவிட்டாலும் சாத்தியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருந்தது. மாறாக எல்.ரீ.ரீ.ஈ உயர்மட்டம், அதன் முந்தைய கடுமையான நிலைப்பாட்டை மீளப் பின்பற்றுவது போன்ற வழக்கமான பாணியிலான மடத்தனமான ஒரு பிசகினையே இப்போதும் செய்தது. விடயங்களை மேலும் சிக்கலாக்குவதுபோல, எல்.ரீ.ரீ.ஈ அதன் பொதுமக்கள் அனைவரையும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிக்க முயல்பவர்களை மிருகத்தனமாக தண்டனை வழங்குவதாகவும் ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்த தொடங்கின.

புலிகள் சார்பான ஆர்;ப்பாட்டக்காரர்கள் அதை மூடிமறைத்தாலும் அல்லது மறுத்தாலும் எல்.ரீ.ரீ.ஈ பற்றிய சர்வதேச பொது அபிப்ராயத்தை, அதனால் அழிக்க முடியவில்லை. எல்.ரீ.ரீ.ஈ கையாண்ட பொதுமக்களின் நிலமை என்கிற துருப்புச் சீட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படவில்லை. அநேகமான மேற்கத்தைய நாடுகளில் தடை செய்யப்பட்டதும், மற்றும் பிரபாகரன் போன்ற ஒரு மனிதரை தேசிய தலைவர் என விசுவசிக்கும் ஒரு இயக்கத்தால் ஒற்றுமையை உறுதிப் படுத்துவது சவாலான ஒரு விடயம் என்பதால் மேற்கின் பொதுப்படையான கருத்துடன் அதனால் இணைய முடியவில்லை.

ஆர்ப்பாட்டங்கள்

பொதுமக்களின் கருத்துப்படி இந்தப் போக்கு வெகு தெளிவாகத் தெரிந்தது. ஊடகங்கள் அதை வெளிப்படுத்துவது அளவிலும் தரத்திலும் குறைவடைய ஆரம்பித்தது. ஒரு சிலரைத் தவிர பிரதான நீரோட்டத்தில் உள்ள மேற்கத்தைய அரசியல்வாதிகள் பிரபாகரனின் படம் மற்றும் புலிக் கொடி என்பன காட்சியளிக்கும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என்பனவற்றில் பங்கு பெறுவதை தவிர்க்க ஆரம்பித்தார்கள். பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் சில சமயங்களில் போக்குவரத்தை வலுவிழக்க வைத்தபோதிலும்கூட பிரதான நீரோட்டத்தில் உள்ள மேற்கத்தைய அரசியல்வாதிகளில் பலரும் குறிப்பாக அரசியல் பதவிகளை வகிப்பவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உடன் பகிரங்கமாக அடையாளம் காண்பிப்பதை தவிர்த்துக் கொண்டார்கள்.ltte demo

ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்கும் வகையில் புலிக்கொடிகளை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு சுருட்டி வைத்துவிட்டு, அவர்கள் வராதபோது அவைகளை திரும்ப பறக்க விடுவது போன்ற சிறுபிள்ளை விளையாட்டுக்களை விளையாடவும் செய்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ நாட்டில் மேலும் பின்வாங்கியபோது நிலமை மோசமடையத் தொடங்கிற்று. ஒரு புதிய போர்க்குணம் வெளிநாட்டில் காட்சிக்கு விடப்பட்டது.

சுய பலி கொடுப்பது, சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது, வீதிகளில் போக்கு வரத்துக்களை தடுப்பது, அமைச்சரவை கட்டிடங்கள், மற்றும் அரசாங்க அலுவலகங்களுக்கு முன்னால் கோபத்தை வெளிப்படுத்தி கூச்சலிடுவது, தூதரகங்கள் உயர் ஸ்தானிகர் அலுவலகங்கள் என்பனவற்றுக்கு வெளியில் ஆhப்பாட்டம் நடத்துவது, ஸ்ரீலங்கா மற்றும் இந்திய ராஜதந்திரிகள் மீது அழுகிய முட்டை மற்றும் தக்காளிகள் வீசி காலித்தனம் பண்ணுவது, போன்றவற்றை ஒத்த நடவடிக்கைகள் பரவலாயின.

இளம் ஆர்வலர்கள் பக்கமிருந்து எழுந்த குழப்பம் விளைவிக்கும் ஒரு போக்கினை சட்ட அமலாக்க அதிகாரிகள் எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்திய சிங்கள புலம் பெயர்ந்த சமூக அங்கத்தினர்களோடு மோதல் ஏற்படும் உராய்வு நிலையும் தோன்றியது. இதனால் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் ஒரு தந்திரோபயமான தவறை செய்ய இருந்தார்கள், இது, மனிதாபிமானப் பேரழிவை ஏற்படுத்தும் இனத்தை மையமாகக் கொண்ட ஒரு அணுகு முறை என்பதால், அது பரவியிருந்தால் புலிசார்ந்த கிளர்ச்சியை என்பதைக் கைவிட்டு, மனித உரிமை கண்ணோட்டத்தில் அநேக மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை கவர்ந்திழுத்து, அவர்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் செய்திருக்கும் பரந்த சாத்தியம் நிகழ்ந்திருக்கும். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ என்கிற வாசனை அத்தகைய ஒரு பெரிய அணிதிரட்டலை தடுத்தது.

தோல்வி

புலம்பெயர்ந்தோர் சமூகத்திலுள்ள எல்.ரீ.ரீ.ஈ யினரின் குறுகிய கண்ணோட்டத்திலான நடத்தையினால் திருத்தமுடியாத ஒரு இழப்பு புலிகளினால் தமிழ் மக்கள்மீது ஏற்படுத்தப்பட்டது. தமிழர்களை ஸ்ரீலங்காவில் பேரழிவான பெரும் செங்குத்தான சரிவினை நோக்கி தள்ளிய பிறகும்கூட மே 2009ல் நந்திக்கடல் ஏரியின் கரையோரத்தில் விரிவடைந்த தவிர்க்க முடியாத தோல்வியை அதனால் தடுக்க முடியவில்லை.

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு மரண அடியினை பெற்றாலும்கூட, அதன் வெளிநாட்டு கட்டமைப்பு அதனால் பாதிப்படையவில்லை. அதன் கிளைகள் முன்னணி அலுவலகங்கள், வியாபாரங்கள் ஊடக அமைப்புகள் வழமைபோலவே இயங்கி வருகின்றன. தமிழ் புலம்பெயர் சமூகங்களிடையே உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பான பிரிவுகளிடையே அற்ப சச்சரவுகள் இருந்தாலும்கூட, அது தொடர்ந்து தனது தமிழீழ விடயத்தைப் பற்றிக்கொண்டு, எங்கெல்லாம் சாத்திமோ அங்கெல்லாம் புலிக்கொடியை பறக்க விடுகிறது. ஒரு மோசடி நடவடிக்கையாக புலிக்கொடி எல்.ரீ.ரீ.ஈ யினுடையது அல்ல, அது தமிழீழத்தினுடையது என்கிற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலுள்ள பிரதான ஊடகங்கள்; மற்றும் புதிய தலைமுறையை சேர்ந்த தமிழ் பேசத்தெரியாத தமிழ் பையன்கள், ஆகியோரின் ஒரு பகுதியினரிடத்து உறுமும் புலி சின்னத்தை கொண்ட கொடி தமிழ் தேசியக்கொடி என்கிற தவறான தகவல்கள் வழங்கப் பட்டுள்ளLtte activitன.

வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்ந்த சக்திகள், 2009ல் எல்.ரீ.ரீ.ஈ அடைந்த இராணுவத் தோல்விக்குப் பின்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகாரம் மற்றும் செல்லாக்கு என்பனவற்றை இழந்து விட்டன. உள்ளக அபிப்ராயபேதங்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் என்பன அந்த இயக்கத்தை பெரிதும் பாழ்படுத்திவிட்டன. இதற்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உதாரணம், ஒரு காலத்தில் புலிகளின் தலைமை ஊடகமான தமிழ்நெட்டினால் வெறுப்பாக காட்சிப்படுத்தி பேசப்பட்ட, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் அதன் சுய - பாணி பிரதமரான விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர்.

குறுகிய கால அறிவித்தலில் முக்கியமான மேற்கு நகரங்களில் ஆயிரக்கணக்கான கொடி பிடிக்கக்கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை எல்.ரீ.ரீ.ஈ அணிதிரட்டக்கூடியதாக இருந்த காலம் மலையேறிவிட்டது. பெரும் எண்ணிக்கையிலான புலிகள் சார்பு ஊடக அமைப்புகள் இயங்குவதை நிறுத்திவிட்டன. நிதி திரட்டல் முற்றாக வற்றிப் போகாவிட்டாலும்கூட நிச்சயமாக குறைந்து விட்டன. எல்.ரீ.ரீ.ஈ க்கு சொந்தமான் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை வைத்திருந்த அல்லது நிர்வகித்து வந்த பினாமிகள் அவற்றை சொந்தமாக்க ஆரம்பித்துவிட்டார்கள் அல்லது அவற்றை விற்றுவிட்டு பணத்துடன் ஓடிவிட்டார்கள்.

உருமாற்றம்

பல படித்த மற்றும் உயர் கல்வி மற்றும் தொழில் திறமைமிக்க புலி ஆதரவாளர்கள், இரவோடு இரவாக உருமாற்றம் பெற்றிருப்பது மிகவும் வேடிக்கையானது கூட. எல்.ரீ.ரீ.ஈ யின் ஒவ்வொரு செயற்பாட்டையும், மாற்றுக் கருத்துடையவர்களை கொலை செய்ததை கூட, நியாயப்படுத்திய இந்த நபர்கள், இப்போது மனித உரிமையின் காவலர்களாக மாறியுள்ளார்கள். அவர்கள் வெட்கமின்றி கௌரவமான மனித உரிமை அமைப்புகளான, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை என்பனவற்றுடன் இணைந்துள்ளார்கள்.

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ வீழ்ச்சியடைந்த பின்னர் வெளிநாடுகளில் எழுந்துள்ள மற்றொரு பூனைப் படையினர் “வலைத்தள வீரர்கள்” ஆவார்கள். பரந்த அளவில் இணையத்தள மற்றும் மின்னஞ்சல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளங்கள் பெரும்பாலும் ஸ்ரீலங்காவில் உள்ள நிலமைகளுக்கு மாறாக, பொய்யையும் புரட்டுகளையும் வெளியிடுகின்றன. மின்னஞ்சல் வீரர்கள் ராஜபக்ஸவின் ஆட்சியின் வீழ்ச்சியையும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் உயிர்த்தெழுதலையும் எதிர்பார்த்து கொட்டாவி விட்டபடி தங்களுக்குள் தீ கக்கும் கடிதங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

ராஜபக்ஸ ஆட்சியுடன், மற்றும் சர்வதேச சமூகத்தில் உள்ள செல்வாக்கான நாடுகளின் அங்கத்தவர்கள் மோதல் போக்கை ஏற்படுத்துவது, இந்த புலிச் சக்திகளுக்கு வெளியேற்ற காலத்தில் கடவுள் இஸ்ராயேலியர்களுக்கு வழங்கிய உணவினை போன்றது. மேற்கத்தைய ஊடகங்களின் ஒரு பிரிவினர்கள் மற்றும் மதிப்பான மனித உரிமை அமைப்புகள் தமிழ் பொதுமக்களின் நிலையில் கரிசனை காட்டுவதும் இவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கும் சந்தர்ப்பம் எதையும் அவர்கள் பற்றிக்கLost victoryொண்டு விடுவார்கள்.

புலம்பெயர்ந்த சமூக சக்திகள் போரின் கடைசி நாட்களில் செய்த தவறுக்குப் பதிலாக இப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் பொறிகளை தவிர்த்து, ஸ்ரீலங்காவில், நீதியான செயற்பாடு, பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமை போன்றவற்றில் அக்கறை உள்ளவர்களைப்போல புதிய தோற்றத்தை ஏடுத்துள்ளன. சர்வதேச உறவுகளை தவறாக கையாளும் கொழும்பின் போக்கு, புலம்பெயர்ந்த புலி மூலகங்களுக்கு, ஒரு புதிய அவதாரத்தில் புதிய வாழ்வுக்கான குத்தகையை வழங்கியுள்ளது.

ராஜபக்ஸ ஆட்சி, சர்வதேச சமூகத்துக்கு முக்கியமாக இருந்த வேளையில், தங்களை விமர்சித்தவர்களுடன் எல்.ரீ.ரீ.ஈ இப்போது சேர்ந்து வருகிறது. ஸ்ரீலங்கா, சர்வதேச சமூகத்தை விமர்சித்து வருகிறது, மற்றும் எல்.ரீ.ரீ.ஈயினால் இயக்கப்படும் ஊடகங்கள் புலம்பெயர்ந்தவர்களிடத்து புலிகளின் மதிப்பை பெருக்கி, அதை வளர்ப்பதற்கு உதவி செய்கின்றன.

நாளாந்த வழக்கிலுள்ள தமிழ் நாட்டுப்புற சொல் வழக்குகளில் புலிகளுக்கு உவமையாக சொல்லக்கூடிய பல சொற்பதங்கள் உள்ளன. அப்படியான ஒரு சொல்வழக்கு “பசுத்தோல் போர்த்திய புலி” என்பதாகும். உருவகத்தில் கடுமையான ஆபத்துக்களை கொண்ட ஒன்று தன்னை அப்பாவியாக சித்தரிப்பதை, இப்பதம் விளக்குகிறது. ஆங்கிலத்தில் இதனை ஒத்த பழமொழியாக ஆட்டின் தோலில் மறைந்துள்ள ஓநாய் என்கிற பழமொழி உள்ளது.

மிகவும் சுவராஸ்யமான நிகழ்ச்சியாக உலகளாவிய தமிழ் புலம்பெயர் சமூகம் எனும் புலால் உண்ணும் புலி, தன்னை தாவர உண்ணியான பசுவை போல சித்தரிக்க முயலுகிறது. இது எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு செயற்பாட்டாளர்கள், நீதியையும் பொறுப்புக் கூறலையும் தேடும் மனித உரிமை காவலர்களாக உருமாறியிருப்பதை எடுத்துக்காட்டும் வெளிப்படையான சரித்திரம்.

- டி.பி.எஸ்.ஜெயராஜ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல