எடுத்துக் காட்டாக, சீதேஷ்ண நிலையைக் காட்டும் விட்ஜெட் (weather widget) அப்போதைய சீதோஷ்ணநிலையைக் காட்டிக் கொண்டிருக்கும். நீங்கள் அதில் டேப் செய்தால் தான், மேலும் பல விபரங்களைக் காட்டும்.
விட்ஜெட் என்பது உங்கள் மொபைல் போனின் திரையில் தங்கி, எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். இதனால், அதனை ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்து நீங்கள் அது தரும் தகவலைப் பெறலாம்.
இந்த தகவலுக்காக, நீங்கள் ஓர் அப்ளிகேஷனத் திறக்க வேண்டியதில்லை. பல வேளைகளில், இந்த விட்ஜெட்கள், அவற்றை நீங்கள் டேப் செய்திடும் வரை, மினிமைஸ் செய்யப்பட்டே இருக்கும்.
மிகப் பிரபலமான விட்ஜெட் குறிப்பிட வேண்டும் என்றால், நேரம் காட்டும் கடிகாரம் மற்றும் சீதோஷ்ண நிலை காட்டும் விட்ஜெட் ஆகியவற்றைக் கூறலாம். இவற்றை டேப் செய்தால் மட்டுமே கூடுதல் தகவல்களைத் தரும்.
ஆனால், ஓர் அப்ளிகேஷன் என்பது, அதன் தகவல்களைப் பெற வேண்டும் எனில், அதனை டேப் செய்திட வேண்டியதிருக்கும்.
விட்ஜெட்டுகள் சற்று கூடுதலான மெமரி மற்றும் பேட்டரி சக்தியைப் பயன்படுத்தும். ஏனென்றால், நீங்கள் போனை எடுத்த வுடனேயே, ஸ்கிரீன் உயிர் பெற்று, அதன் தகவல்கள் காட்டப்படுகின்றன.
ஆனால், அப்ளிகேஷன்கள், நீங்கள் அவற்றைத் திறக்கும் போதுதான், பேட்டரி, ராம் மெமரி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இறுதியாக, நீங்கள் நீக்கிய பின்னும், ஓர் அப்ளிகேஷன் இயக்கத்திற்கு வருவதற்குக் காரணம், அவை வேறு ஒரு இயக்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுதான். எனவே, இவை தாமாக இயக்கத்திற்குத் தயாராக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக