இவர் சொல்லித்தான் வசூல் செய்கிறோம் என்று மிக தெளிவாக சொல்கிறார்கள்!

“விடுதலை புலிகளின் வெளிநாட்டுப் பிரிவு என்று கூறிக்கொண்டு வெளிநாட்டு தமிழ் வர்த்தகர்களிடம் பணம் வசூல் செய்யும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்” என்று தெரிவித்துள்ளார், வெளிநாட்டு விடுதலைப் புலிகள் அணிகள் ஒன்றின் தலைவரான விநாயகம்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சிலர் தமிழ் வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை நான் நேரில் அவதானித்துள்ளேன். தொடர்ந்தும் நான் மௌனமாக இருப்பது இப்படியான மோசமான செயற்பாடுகளுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடும் என்ற காரணத்தால் இந்த அறிவித்தலை வெளியிட முடிவு செய்துள்ளேன்.
பணம் சேகரிக்கும் நிர்வாகக் கட்டமைப்புடனோ அவர்களது செயற்பாடுகளுடனோ எனக்கு எவ்வித தொடர்புகளும் கிடையாது என்பதை அனைவருக்கும் தெளிவாக அறியத் தருகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் 4 பிரிவுகளாக இயங்கிவரும் விடுதலைப் புலிகள் பிரிவுகளில், பண பலம் வாய்ந்த அணியாக நெடியவன் தலைவராக உள்ள பிரிவும், மக்கள் ஆதரவு உள்ள பிரிவாக விநாயகம் தலைவராக உள்ள பிரிவும் உள்ளன.
நெடியவன் குழுவின் தளபதிகளில் ஒருவரான பரிதி, சமீபத்தில் பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து, பிரான்ஸ் காவல்துறையால் விநாயகம் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் அது பொய் என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.
விடுதலைப் புலிகள் 30,000 பேர் இலங்கை முல்லைத்தீவு காட்டில் ரகசிய பயிற்சி பெற்று வருவதாகவும், அதற்கு ஏற்படும் செலவுகளுக்கு நிதியுதவி தேவை எனவும், வெளிநாட்டு விடுதலைப் புலிகளில் ஒரு குழுவினர் வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு குழுவினர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மருத்துவ நிதிக்கு என பண வசூல் செய்கின்றனர்.
மற்றொரு குழு, சர்வதேச அளவில் ஈழத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் முயற்சிகளுக்கான செலவுகளுக்கு என்று சொல்லி பணம் சேர்க்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் இலங்கையில், அரசு நலத் திட்டங்களை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
வெளிநாடுகளில் எந்தக் குழுவுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தலைவர் விநாயகம் சொல்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் பண வசூல் செய்வது, அவரவர் திறமை! அதை ஏன் இவர் தடுக்க வேண்டும்?
பரபரப்பு

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக