எண் கோடு பிரிண்ட் செய்திட
எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைப் பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளில் தரப்பட்டுள்ள எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறுக்கு நெடுக்காகச் செல்லும் கோடுகளையும் சேர்த்து பிரிண்ட் செய்தால் நன்றாக இருக்குமே என்று பிரியப்படுகிறீர்களா! தாராளமாக இவற்றையும் அச்சிடலாம். அதற்கான செட்டிங்ஸ் வழிமுறை களைப் பார்ப்போம்.
மிகப் பெரிய ஒர்க் ஷீட்டுகளில் தேர்ந் தெடுத்து பிரிண்ட் செய்கையில் இது மிகவும் உதவியாக இருக்கும். மேலும் வரிசைகளுக்கு நாம் பெயர் கொடுக்காமல் இருந்தாலும் இந்த ஏற்பாடு நமக்கு உதவிடும்.
இதற்கு முதலில் File மெனுவில் பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்க வேண்டும். Page Setup விண்டோ திறக்கப்பட்டவுடன் Sheet என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில் நடுவே உள்ள Print என்னும் பிரிவில் Gridlines மற்றும் Row and Column Headings என வரிகள் செக்பாக்ஸுடன் இருக்கும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
இதில் எது தேவையோ அதில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தலாம்.
பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்த முறை பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளுக்கான தலைப்பு/எழுத்து/எண் மற்றும் கோடுகள் அச்சிடப்படும்.
பேஸ்ட் பட்டன்
எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டி ருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம்.
அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக
மேலும் சில வேலைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம்.
இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம்.
எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட் டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டி ருக்கும். உங்கள் தேவைக் கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக