டெக்ஸ்ட் எடிட்டிங் செய்கையில் நாம் கட், டெலீட், பேக் ஸ்பேஸ் என ஒரே மாதிரியான கட்டளைகளைப் பயன்படுத்துகிறோம். இவை செயல்படுவதில் ஏதேனும் வேறுபாடு உள்ளதா?
இந்த கட்டளைகள் எல்லாம் ஒரே மாதிரியான செயல்பாட்டினை மேற்கொள்வது போல் தெரியும். விளைவுகள் ஏறத்தாழ சமமாக இருந்தாலும், இவை செயல்படுவதில் சின்ன சின்ன வித்தியாசம் இருக்கிறது. சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒரு டாகுமெண்ட், பிரசன்டேஷன், ஒர்க்ஷீட் என எந்த வகையாக இருந்தாலும் இதன் செயல்பாடு டெக்ஸ்ட்டை நீக்கும் வகையிலேயே இருக்கும். ஆனால் நீக்கப்பட்ட டெக்ஸ்ட்டை அல்லது ஆப்ஜெக்ட்டை சிஸ்டம் எப்படி செயல்படுத்துகிறது என்பதில் தான் வேறுபாடு உள்ளது. இவற்றில் கட் (Cut Ctrl+x) செய்கையில் நீக்கப்பட்ட டெக்ஸ்ட் கிளிப் போர்டுக்குச் செல்கிறது.
அங்கு வைக்கப்படுவதால் அதனை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் அணுகி, பெற்று பயன்படுத்தலாம். ஆனால் டெலீட் மற்றும் பேக்ஸ்பேஸ் (Delete/Backspace)பயன்படுத்துகையில் நீக்கப்படும் டெக்ஸ்ட் மறைந்துவிடுகிறது. இதனை உடனே அன் டூ (Undo Ctrl+z) செய்தால் மட்டுமே மீண்டும் கிடைக்கும். எனவே அழிப்பதனைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணினால், கட் செய்திடுங்கள். மீண்டும் அறவே வேண்டாம் என எண்ணினால் டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக