“தமிழக முதல்வர் கச்சதீவை கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்று சிலர் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது” என்று கூறியுள்ளார், இலங்கையில் உள்ள இந்திய தமிழர் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்டசபை தீர்மானங்கள் பற்றி இலங்கையில் சிங்கள தீவிர அமைப்புகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன், “இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களிடம் கேட்டுக்கொண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி கொ
டுக்கவில்லை.
அதேபோல் இன்று மீண்டும் கச்சதீவை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜெயலலிதா இங்கு (இலங்கையில்) வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களான எம்மை கேட்டுக் கொண்டு முன்வைக்கவில்லை.
எனவே இலங்கையில் வாழும் எம்மை, ‘இந்திய தமிழர்கள்’ என்ற பெயரில் இந்த கச்சதீவு விவகாரத்தில் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவின் ஒரிசா, வங்காளம் ஆகிய பிராந்தியங்களில் இருந்தே சிங்கள இனத்தவர்கள் இலங்கைக்கு வந்து குடியேறினார்கள் என டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார்.
எனவே இனி ஒரு தடவை இலங்கையில் வாழும் ‘இந்திய தமிழர்கள்’ என்ற இலங்கை பிரஜைகளை நாடு கடத்த வேண்டும் என்றால், இங்கு வாழும் சிங்கள மக்களையும் துணைக்கு அழைத்து கொண்டுதான் நாம் இந்தியா செல்ல வேண்டும். இந்நாட்டின் பூர்வீக குடிகளான வேடர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு எல்லோரும் இந்தியா நோக்கி பயணமாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் வாழும் ‘இந்திய தமிழர்களை’ நாடு கடத்த வேண்டும் என்று தொடங்கிய விவகாரம், இலங்கையில் சில இடங்களில் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியத் தமிழருக்கு எதிரான பேச்சுக்கள் அதிகம் கேட்க தொடங்கியுள்ளன.
காரணம், இலங்கையில் உள்ள இந்திய தமிழர்கள், இலங்கை தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இல்லை. சிங்கள மக்களுடன் மத்திய மாகாணம், மற்றும் மேற்கு மாகாணங்களில் வாழ்கிறார்கள்.
அங்கு நிலைமை கொஞ்சம் மோசமாகவே உள்ளது. சுமார் எட்டரை லட்சம் இந்தியத் தமிழர் இருக்கிறார்கள்.
விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக